வள்ளி கும்மி ஆடிய அண்ணாமலை.. “இதை எங்க கொண்டு போகப்போறோம் பாருங்க”.. முக்கிய வாக்குறுதி!

Subscribe to Oneindia Tamil

கோவை: மக்களுடன் சேர்ந்து வள்ளி கும்மி ஆடிய பாஜக வேட்பாளர் அண்ணாமலை, மீண்டும் மோடி பிரதமர் ஆனதும் வள்ளி கும்மிக்கு உரிய அங்கீகாரம் தரப்படும் என உறுதி அளித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக மாநிலத் தலைவராக உள்ளதால் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அண்ணாமலை, கோவை தொகுதியில் தனக்காக தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நாள்தோறும் காலை முதல் இரவு வரை மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார் அண்ணாமலை.

Annamalai danced Valli kummi and assured that Valli Kummi will be given recognition

ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்யும்போது பல்வேறு உறுதிமொழிகளை அளித்து வரும் அண்ணாமலை வாக்காளர்களுக்கு ஏற்ப கன்னட மொழியில் பேசுவது உள்ளிட்ட பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகிறார். இந்த நிலையில் கோவை பகுதியில் அண்ணாமலையை வரவேற்க நடந்த வள்ளி கும்மி நடனத்தில் அவரும் கலந்து கொண்டு நடனம் ஆடியுள்ளார்.

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் நேற்று மாலை அண்ணாமலை வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவரை வரவேற்க, அப்பகுதி பெண்கள் வள்ளி கும்மி நடனம் ஆடினர். உடனே வேனில் இருந்து இறங்கி அந்த நடன குழுவினருடன் இணைந்து அண்ணாமலையும் சிறிது நேரம் வள்ளி கும்மி நடனம் ஆடினார். திடீரென அண்ணாமலை நடனமாடியதால், தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

அதைத்தொடர்ந்து பேசிய அண்ணாமலை, "பல முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு பிரதமரை பலப்படுத்த போகிறோம். பிரதமர் வலிமையாக வந்து அமரும்போது கோவையும் வளர்ச்சி பாதையை நோக்கிச் செல்லும். நாடாளுமன்ற உறுப்பினர், மோடி இருக்கும் கட்சியை சார்ந்த உறுப்பினர் கோவையில் இருக்க வேண்டும். எனவே நீங்கள் வாக்களிப்பதோடு உங்கள் உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் தாமரைக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும்.

வள்ளி கும்மிக்கு மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது. சீவக சிந்தாமணியில் பேசப்பட்ட கலை வள்ளி கும்மி. அயோத்தியில் ராமர் கோவில் திறக்கும் போதும் வள்ளி கும்மி நடனம் ஆடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இன்று நாங்கள் ஒரு உறுதி கொடுக்கிறோம். 2024ல் பிரதமர் ஆட்சியில் அமர்ந்த பின்னர் வள்ளி கும்மிக்கு என்று உரிய அங்கீகாரம் மத்திய அரசால் வழங்கப்படும். பாரம்பரியமான கலை என்று அங்கீகாரம் கொடுக்கப்படும்.

அப்படி வள்ளி கும்மிக்கு அங்கீகாரம் கொடுக்கும் போது அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் வள்ளி கும்மி ஆட முடியும். கொங்கு பாரம்பரியத்தை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்" என அண்ணாமலை தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+