அதிமுக- பாஜக கூட்டணி? அமித்ஷா தமிழகம் வரும் போது பல மாற்றங்கள் நிகழும்! என்ன சொல்கிறார் அண்ணாமலை?
கோவை: வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அவசர கதியில் சொல்ல முடியாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டடசபை கூட்டணி குறித்து அவசரகதியில் எதையும் சொல்ல முடியாது. மத்திய அமைச்சர் அமித்ஷா 2 நாட்களில் தமிழகம் வருகிறார்.

அவர் தமிழகம் வரும் போது இன்னும் பல மாற்றங்கள் நிகழும் என அண்ணாமலை கூறியிருக்கிறார். அதிமுக- பாஜக கூட்டணி என்பது கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக முறிந்துவிட்டது. முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா ஆகியோர் மீது பாஜக நிர்வாகிகள் வைத்த கருத்துகளை எதிர்த்து அதிமுக- பாஜக இடையே வார்த்தை போர் ஏற்பட்டு கூட்டணி முறிந்துவிட்டது.
இந்த நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின் போது அதிமுக - பாஜக கூட்டணி ஏற்படும் என பலர் சொல்லி வருகிறார்கள். என்னதான் அதிமுகவினர் மறுத்து வந்தாலும் அதற்கான சூழல் அமைந்த வண்ணம் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில் கூட்டணி முறிவுக்கு பிறகு தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணி 2026ஆம் ஆண்டு தேர்தலிலும் தொடரும் என தேமுதிக தெரிவித்திருந்தது. அது போல் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை ஒவ்வொரு முறையும் எடப்பாடி பழனிசாமி மறுத்துவந்தார்.
இந்த நிலையில் சேலத்தில் இன்று செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பாஜகவுடன் கூட்டணியா என செய்தியாளர்கள் கேட்டனர். எப்போதுமே திட்டவட்டமாக மறுக்கும் எடப்பாடி பழனிசாமி, இன்னும் 6 மாதம் கழித்து கேள்வி கேளுங்கள் என்றார்.
அதாவது முன்பு போல் கூட்டணி இருக்காது என மறுக்கவே இல்லை. அது போல் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டா என கேட்டதற்குக் கூட அதிமுக எங்காவது சொல்லியிருக்கிறதா என அவர் கேட்டார், மேலும் தேவையில்லாமல் யார் யாரோ சொல்வதை வைத்து என்னிடம் கேள்வி கேட்காதீர்கள் என எடப்பாடி கூறியுள்ளார்.
இது தேமுதிகவை ஓரம் கட்டும் செயலாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கோவையில் எஸ்.பி.வேலுமணியின் மகன் திருமணத்திற்கு வந்த அண்ணாமலையுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சகஜமாக பழகியதும் கவனிக்கத்தக்கதாக உள்ளது.












Click it and Unblock the Notifications