கோவை வாக்காளர்களுக்கு போன் போட்டு ஜிபேயில் பணம் அனுப்புகிறார் அண்ணாமலை.. திமுக பரபர புகார்
கோவை: நாளை லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு அலைபேசி மூலம் அழைத்து தனக்கு வாக்களிக்குமாறு கேட்டு G Pay மூலம் பணம் அனுப்பி வருவதாக அண்ணாமலைக்கு எதிராக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திமுக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் நாளை தேர்தல் நடக்கிறது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் 22 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

ஒரு பக்கம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்காளர்கள் கையில் வைக்கும் மை உள்ளிட்ட ஓட்டுப்பதிவுக்கான பொருட்களை வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைப்பது என்றும் மறுபுறம் ஓட்டுப்பதிவு நாளை நடைபெறுவதால் இன்று வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதேபோல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று கோவை லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, செல்போன் மூலமாக அழைத்து தனக்கு வாக்களிக்குமாறு கூறி கூகுள் பே மூலமாக வாக்களார்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருவதாக திமுக சார்பில் கோவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் அமைப்பாளர் பத்ரி என்ற க. பழனிச்சாமி அளித்துள்ள புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பெறுநர்:
தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள்
கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதி
கோயமுத்தூர்.
நான் கோவை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் அமைப்பாளராக உள்ளேன். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை அவர்கள் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக அவரது தேர்தல் பணிமனையில் இருந்து வாக்காளர்களுக்கு அலைபேசியின் மூலம் அழைத்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு GPay மூலம் பணம் அனுப்பி வருகிறார்.
மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நேற்று மாலையுடன் தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் தொகுதியை விட்டு வேளியேறி இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக சட்டவிரோதமாக கோவை நாடாளுமன்ற பாஜக தேர்தல் அலுவலகமான அவினாசி சாலை அரவிந்த் கண் மருத்துவமனை அருகில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தற்போதும் தங்கி இருந்து,
வாக்காளர்களுக்கு போன் செய்து தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கோரியும் GPay மூலம் ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்து வருகிறார். கீழ்க்கண்ட வெளி மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் பணம் விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications