கோவை "பவர் சென்டர்".. செந்தில் பாலாஜி செய்த மேஜிக்.. வெலவெலத்து போன 4 "தலைகள்".. நோ சொன்ன ஸ்டாலின்?
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் எழுச்சி காரணமாக உள்ளூர் திமுக நிர்வாகிகள் கடும் அப்செட்டில் இருக்கிறார்களாம். வெளியூர் ஆட்டக்காரர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதையை உள்ளூர் ஆட்டக்காரர்களுக்கு தரப்படவில்லை என்ற அதிருப்தியில் அவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது,.
திமுகவின் உள்கட்சி தேர்தல் 85 சதவீதம் முடிந்து விட்டது. ஜனநாயக ரீதியாக தேர்தலை நடத்துகிறோம் என திமுக மார் தட்டிக் கொண்டாலும், பெரும்பாலான பதவிகள் காம்பரமைஸ் பேசி நியமனங்களாகவே நடந்து முடிந்திருக்கின்றன.
அதாவது சண்டை போட்டுக்கொள்ளாமல் உங்களிடையே பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். தேர்தலில் வென்று பதவிக்கு வந்தால் மோதல் இருக்கும்.. மாறாக காம்பரமைஸ் செய்து கொண்டு பதவிக்கு வந்தால் உட்கட்சி நட்பு நீடிக்கும் என்று உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பெரும்பாலான பதவிகள் சமாதானம் செய்யப்பட்டு "அன் அப்போஸ்ட்" நியமனங்களாகவே நடந்துள்ளன.

பஞ்சாயத்து
ஒரு சில பஞ்சாயத்துகள் மேலிடம் வரை சென்று சரிசெய்யப்பட்டன. இந்த நிலையில், மா.செ.க்களுக்கான தேர்தல் விரைவில் நடக்க விருக்கிறது. திமுக அமைச்சர்கள் ஒவ்வொரு��ரையும் சில மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சராகவும் நியமித்தது திமுக தலைமை. தங்களுக்கு கொடுக்கப்பட்ட மாவட்டங்களில் நடக்கும் கட்சி பஞ்சாயத்துகளையும் அந்த பொறுப்பு அமைச்சர்தான் கவனித்து கொள்கிறார். இந்த நிலையில், மா.செ.க்கள் தேர்தல் நடக்கவிருப்பதால், அமைச்சர்கள் கவனிக்கும் மாவட்டங்களில் தங்களுக்கு விசுவாசமாக இருக்கும் நபர்களை மா.செ.வாக கொண்டு வர திட்டமிடுகிறார்கள��.

என்ன நடக்கும்?
அதற்கேற்ப, அமைச்சர்கள் ரகசியமாக காய்களை நகர்த்தியும் வருகின்றனர். உதாரணத்திற்கு... கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருப்பவர் கரூரை சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி. இவரின் கட்டுப்பாட்டில்தான் இப்போது கிட்டத்தட்ட கோவை திமுகவே இருக்கிறது. கோவை திமுகவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கோவை மாவட்டத்தில், திமுகவுக்கு அமைப்பு ரீதியாக, கோவை வடக்கு-தெற்கு-கிழக்கு என 3 மாவட்டங்களும், கோவை மாநகர் மேற்கு-கிழக்கு என 2 மாவட்டங்களும் என 5 மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இருக்கிறார்கள்.

கோவை திமுக
இந்த 5 மா.செ.க்களில் கார்த்தி என்பவரை தவிர மற்ற 4 மா.செ.க்களிடமும் செந்தில்பாலாஜிக்கு ஆரோக்கியமான உறவுகள் இல்லை என்று கூறப்படுகிறது. அவர்களை மதிக்க செந்தில்பாலாஜி விரும்பாததால், செந்தில்பாலாஜியை அவர்களும் மதிப்பதில்லை. இந்த நிலையில், 5 மாவட்டங்களாக இருப்பதால் 5 அதிகார மையம் (மா.செ.) உருவாகிறது ; இதை குறைத்து 3 மா.செ.க்களாக உருவாக்க வேண்டும் என காய்களை நகர்த்தி வருகிறாராம் செந்தில்பாலாஜி.

கோவை பிளான்
அதாவது, கோவையில் உள்ள 5 மாவட்டங்களை 3 ஆக சுருக்க வேண்டும் ; அந்த மூன்று மாவட்டத்திலும் தனது விசுவாசிகளை மா.செ.வாக கொண்டு வர வேண்டும் என்பதே அவரது திட்டம். அதற்காகத்தான், சமீபத்தில் கொங்கு மண்டலத்துக்கு வந்த ஸ்டாலினுக்கு பிரமாண்டமான வரவேற்பு, விளம்பரம், பொதுக்கூட்டம் என நடத்திக் காட்டினார் செந்தில்பாலாஜி. இவரின் இந்த திட்டத்தை அறிந்து, இதனை ஸ்டாலினிடம் கொண்டு செல்ல கோவை சீனியர் திமுகவினர் முயற்சிக்கிறார்கள். ஆனால், ஸ்டாலினை அவர்கள் சந்திக்க அப்பாயிண்மெண்ட் கிடைக்கவில்லை.

பண பலம்
எப்படியாவது மாவட்ட செயலாளர்கள் மாற்றத்தை தடுக்க வேண்டும் என்று கோவை புள்ளிகள் செந்தில் பாலாஜிக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறார்களாம். வெறும் பண பலத்தை வைத்து மட்டுமே வைத்து சாதிக்கலாம் என செந்தில் பாலாஜி நினைக்கிறார் ; ஆனா, கோவை மக்கள் பணத்துக்கு ஆசைபடுபவர்கள் இல்லை. செந்தில்பாலாஜியின் அரசியல் கோவையில் அதிகமானால் அதனை விளைவினை நாடாளுமன்றத்தேர்தலில் திமுக தலைமை உணரும் என்கிற குமுறுல்கள் கோவை திமுகவின் அதிகரித்தபடி இருக்கிறது.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications