கோவையில் கால் டாக்ஸி அல்லது ஆட்டோ ஆன்லைனில் புக் பண்ண போறீங்களா.. இதை நோட் பண்ணுங்க
கோவை: கோவைக்கு புதுசா போறீங்களா.. அங்கு கால் டாக்ஸி அல்லது ஆட்டோ ஆன்லைனில் புக் பண்ண போறீங்களா? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான்.. சென்னையை பொறுத்தவரை கால் டாக்ஸி அல்லது ஆட்டோவை ஆன்லைனில் ஆப் மூலம் புக்கிங் செய்தால் கூடுதல் கட்டணம் கேட்க மாட்டார்கள். ஆனால் கோவையில் கூடுதல் கட்டணம் கேட்கிறார்கள்.
சென்னைக்கு அடுத்தபடியாக பெரியநகரமாக கோவை வளர்ந்து வருகிறது. கோவை மாநகரில் சென்னை அளவிற்கு மக்கள் அடர்த்தி இல்லை என்றாலும், மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நகரமாகும். கோவை மாநகரில் ஏரளாமான தொழில் நிறுவனங்கள், பெரிய தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் உள்ளன, இது இல்லாமல் சென்னையைவிட அதிகப்படியான மாணவர்கள் விரும்பும் இடமாக கோவை இருக்கிறது.

தமிழ்நாட்டில் பல மாணவர்கள் கல்லூரி படிப்பை படிக்க விரும்பும் ஊராக கோவை திகழ்கிறது. கோவையில் ஏராளமான புகழ் பெற்ற கல்லூரிகள் இருக்கிறது. கோவை தென்னிந்தியாவின் மான்சிஸ்டர் என்பது போல், கல்லூரிகளின் நகரம் என்றும் சொல்லலாம். அந்த அளவிற்கு கல்லூரிகளும் அதிகமாக உள்ளது. இதுதவிர கோவை மாநகரம் கேரளாவின் நுழைவு வாயிலாக திகழ்கிறது. கோவை மாநகரம் கடந்த 20 வருடங்களில் மிகப்பெரிய அளவில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளதால் வாகன நெருக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கால்டாக்ஸி சேவை கோவையில் வேகமாக வளர்ந்து வருகிறது.
ஆனால் கோவைக்கு முதல்முறையாக வருவோர் அல்லது கோவைக்கு அடிக்கடி வெளியூர்களில் இருந்து வருவோர் ஆன்லைன் ஆப் மூலம் கால் டாக்ஸி மற்றும் ஆட்டோக்களை புக்கிங் செய்தால் வித்தியாசமான சிக்கலை எதிர்கொள்கிறார்கள். அது என்னவென்றால், சில டிரைவர்கள் ஆன்லைன் ஆப்பில் காட்டும் தொகையைவிட கூடுதலாக 40 முதல் 50 ரூபாய் கூடுதலாக கொடுத்தால் தான் வருவேன் என்கிறார்கள்.
ஆன்லைனில் டாக்ஸி புக்கிங் செய்தாலும் சரி, ஆட்டோ புக்கிங் செய்தாலும் மீட்டருக்கு மேல் காசு கொடுஎன்பது போல், ஆன்லைன் ஆப்பில் காட்டுவதற்கு மேல் காசு கொடு என்று கேட்பது நடக்கிறது. இதுபற்றி சில டிரைவர்களிடம் கேட்ட போது, கோவை மாநகரின் நகர்புறங்களைவிட புறநகர் பகுதிகளுக்கு செல்லும் போது கூடுதல் கட்டணம் கேட்க வேண்டிய நிலை ஏற்படுவதாக கூறுகிறார்கள். ஏனெனில் 2 முதல் 3 கிலோ மீட்டர் தூரம் இதற்காக செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.
சில நேரம் 4 முதல் 5 கிமீ தூரத்திற்கு யாருமே புக்கிங் செய்ய மாட்டார்கள். உதாரணமாக சொல்வது என்றால், இடையர்பாளையம், தொண்டாமுத்தூர், பேரூர் போன்ற பகுதிகளை தாண்டி டிராப் செய்ய செல்லும் போது அங்கு பெரியதாக புக்கிங் இல்லாத நிலை ஏற்படுகிறது . இதனால் கூடுதலாக சில கிலோ மீட்டர் ஊருக்கு வருகிறோம். அதன்பிறகே புக்கிங் எங்களுக்கு கிடைக்கும். அதனால் நாங்கள் கூடுதலாக கட்டணம் கேட்கிறோம் என்றார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications