சனாதனத்தை ஒழிக்கிறாங்களா? திராவிடத்தை ஒழிக்கிறோம்! நவ.1ல் சென்னையில் மாநாடு.. அர்ஜுன் சம்பத் அதிரடி
கோவை: நவம்பர் 1 ஆம் தேதி சென்னையில் திராவிட ஒழிப்பு மாநாடு நடைபெறும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூரில் அர்ஜுன் சம்பத் பேசுகையில் இரு நாட்களுக்கு முன்பு திமுக மகளிர் உரிமை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அருகில் அமர்ந்திருந்த சோனியா, பிரியங்காவிடம் காவிரி பிரச்சினை குறித்து கூறியிருக்க வேண்டும்.

இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு நேரடியாக அழுத்தம் அளித்திருந்தால் காவிரி நீரை நிச்சயம் பெற்றிருக்க முடியும். ஆனால் முதல்வர் ஸ்டாலின் நிர்பந்தம் செய்யவில்லை. நவம்பர் 1 ஆம் தேதி சென்னையில் திராவிட ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது.
ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. உதயநிதி சனாதனத்தை ஒழிப்போம் என்கிறார். அவருடைய தாய் துர்கா ஸ்டாலினோ சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவை தொடங்கி வைக்கிறார்.
முன்னாள் முதல்வர் எடப்படி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதியை விடுதலை செய்ய வேண்டும் என கேட்கிறார்கள். ஆனால் பயங்கரவாதி இமாம் அலியை என்கவுன்ட்டரில் சுட்டு வீழ்த்தியது யார்? ஜெயலலிதா தலைமையிலான அரசுதானே! அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என குரல் கொடுத்தவர் ஜெயலலிதா.
அவர் நிர்வகித்த அதிமுக இப்போது முஸ்லீம்களை தாஜா செய்கிறது. வரும் 29ஆம் தேதி சென்னிமலையில் ஜெபக் கூடம் அமைக்கக் கூடாது என இந்து மக்கள் கட்சி சார்பில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறும். தமிழகத்தில் இந்துக்கள் விழிப்புமர்வு பெற்று வருகிறார்கள்.
சாமி இல்லை என சொல்லும் திராவிட கட்சிகளை புறக்கணித்து வருகிறார்கள். இது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் யாத்திரையின் மூலம் வெளிப்படுகிறது. திமுகவையும் அதிமுகவையும் வேண்டாம் என நினைப்பவர்கள் லஞ்ச ஊழலை எதிர்ப்பவர்கள் ஒரு அணியாக திரண்டு வருகிறார்கள்.
இந்த அரசியல் மாற்றத்திற்கு இந்து மக்கள் கட்சி துணை நிற்கும். ஹமாஸ் இயக்கத்தை அல் உமா, பாகிஸ்தான் ஆதரவாளர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர், திராவிடக் கட்சிகள் ஆதரித்து வருகிறார்கள். இதை மத்திய உளவுத் துறை கண்காணிக்க வேண்டும். காவிரி ஆணையம், நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். திமுக , காங்கிரஸ் கட்சிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications