எனக்கும் குடிக்கும் சம்பந்தம் இல்லைப்பா.. துறை அமைச்சர் கிட்ட கேளுங்க.. எடப்பாடி கலகலப்பாக பதில்
கோவை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த எடப்பாடியிடம் மதுபான விலை உயர்வு பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எடப்பாடி கலகலப்பாக அளித்த பதிலை பார்க்கலாம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தல் வருவதால் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அறிவிப்பு வெளியாகி 4 மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் கணக்கெடுப்பே முடியவில்லை. எப்போது கணக்கெடுப்பு முடியும் என்று யாருக்கும் தெரியவில்லை. பல நிபந்தனைகள் வைத்து இருக்கிறார்கள்.

தேர்தல் சமயத்தில் இந்த நிபந்தனையை வைக்கவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வழங்கப்படும் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால், தற்போது தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் குழப்பத்தை தான் ஏற்படுத்தியிருக்கிறது. அமலாக்கத்துறை சோதனை குறித்து கேட்கிறீர்கள்.. தவறு செய்ததால் அமலாகக்துறை வருகிறது.
ஆதாராங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும். 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக தான் தலைமை தாங்கியது. அது தொடரும்" என்றார். அப்போது செய்தியாளர்கள் தமிழ்நாட்டில் மதுபான விலை உயர்ந்துள்ளதே என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, சம்பந்தப்பட்ட அமைச்சரைத்தான் இதுகுறித்து கேட்க வேண்டும்.
எனக்கு குடிக்கும் பழக்கம் இல்லை. அதனால் எவ்வளவு விலை உயர்வு என்று எனக்கு தெரியாது. ஆகவே சம்பந்தபட்ட துறை அமைச்சரிடம் கேட்டால் சரியான பதில் கிடைக்கும். எனக்கும் குடிக்கும் சம்பந்தம் கிடையாது. அதனால் பொருத்தம் இல்லாத கேள்வியை கேட்டால் இந்த பதிலை தான் நான் கொடுக்கமுடியும் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் "தொடர்ந்து திமுகவை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன. ஊழலுக்கு கலைக்கப்பட்ட ஒரு அரசாங்கம் திமுக அரசுதான். ஸ்டாலின் பேசுவதற்கு எந்த தார்மீர்க உரிமையும் இல்லை. ஊழல் செய்தற்காக பொன்முடி வீட்டில் ரெய்டு நடந்துள்ளது. செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் வரை போயுள்ளது.
நீதிமன்றமே அவர் கைது செய்யப்படது சரி என்று சொல்லியிருக்கிறது. இன்றைக்கு அவர் சிறையில் இருக்கிறார். கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில் ஆலடி அருணா வழக்கில் சம்பந்தப்பட்டு இருந்தார். என்.கே.கே.பி ராஜா வழக்கில் சம்பந்தப்பட்டு இருந்தார். உடனடியாக அமைச்சரவையில் இருந்து அவரை விடுவித்தார்கள். அதேபோல அதிமுகவில் வருகின்ற போதிலும் ஜெயலலிதா இதேபோன்ற நடவடிக்கை எடுத்தார்.
இதுதான் தமிழகத்தின் வரலாறு. ஆனால் இன்றைக்கு செந்தில் பாலாஜி வாய் திறந்து சொல்லிவிட்டால் என்ன செய்வதென்று என பயந்து போய் இரவோடு இரவாக அவரை சந்தித்து பார்க்கிறார். ஆறுதல் சொல்ல போகவில்லை. ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில்தான் அர்த்த ராத்திரியில் போய் பார்த்து இருக்கிறார். இதுதான் உண்மை" என்றார்.












Click it and Unblock the Notifications