முதல்நாள் இரவே மூடப்பட்ட அவிநாசி மேம்பாலம்.. இளைஞர்கள் குவிந்ததால் ஸ்தம்பித்த போக்குவரத்து
கோவை: கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஜிடி நாயுடு (அவிநாசி மேம்பாலம்) மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். தமிழ்நாட்டின் முதல் நீளமான பாலம் என்ற பெருமையை இந்த அவிநாசி மேம்பாலம் பெற்றுள்ளது. இந்த மேம்பாலத்தில் ஏராளமான பொதுமக்கள், வாகன ஓட்டிகள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க குவிந்ததால் நேற்று இரவு 9 மணியளவில் மேம்பாலம் தடுப்புகளைக் கொண்டு மூடப்பட்டது.
கோவையில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கல்வி, மருத்துவம், தொழில், வேலை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இங்கு வசித்து வருகின்றனர், கோவையில் பிரதான பிரச்சனையாக இருப்பது போக்குவரத்து நெரிசல்தான். இதனைத் தடுக்கும் வகையில் அரசு மற்றும் காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை அவிநாசி சாலை பகுதியில் ஏராளமான கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளதால் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். குறிப்பாக பீக் ஹவர்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்த போக்குவரத்து பிரச்சனையை சரிசெய்யும் வகையில் கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.
இந்த மேம்பாலப் பணிகள் நிறைவடைந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொது மக்களின் பயன்பாட்டுக்காக நேற்று திறந்துவைத்தார். இந்த மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. கோவை மக்களின் நீண்ட நாள் கனவான அவிநாசி மேம்பாலம் திறக்கப்பட்டால் கோவையில் போக்குவரத்து பிரச்சனை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஜிடி நாயுடு பாலம் திறக்கப்பட்ட முதல் நாள் இரவிலேயே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழ்நாட்டிலேயே மிக நீளமான பாலம் என்பதால்இதையடுத்து, காவல் துறையினர் பாலத்தை இரவு 9 மணியளவில் மூடும் சூழ்நிலை ஏற்பட்டது. நேற்று மாலை முதலே புகைப்படம் எடுப்பதற்காகவும், வீடியோ எடுப்பதற்காகவும் குவியத் தொடங்கினர். நீளமான பாலம் என்பதால் வேகமாக வாகனங்களை இயக்கினார்கள்.
மேம்பாலத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனங்களை ஓரமாக நிறுத்திவிட்டு செல்பி எடுக்கத் தொடங்கியதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், மேம்பாலத்தில் எது ஏறு தளம், இறங்கு தளம் என அறிவிப்புப் பலகைகளை வைக்கப்படாததால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக மேம்பாலத்திலேயே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அவிநாசி பழைய மேம்பாலம், புதிய மேம்பாலம் பகுதியை இணைக்கும் பகுதியான உப்பிலிபாளையத்தில் மிகப்பெரிய ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் பெரிய ரவுண்டானா என்பதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், நேற்று இரவு முதல் இன்று காலை வரை மேம்பாலம் மூடப்பட்டு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் கூறியதாவது: "ஜிடி நாயுடு மேம்பாலம் நேற்று திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலேயே நீண்ட பாலம் என்பதால் மக்கள் பாலத்தை பார்வையிட ஏராளமானோர் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான வாகனங்கள் சிறிது தூரம் பயணித்துவிட்டு யூடர்ன் செய்ததால் நேற்று இரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், மேம்பாலத்தில் ஒருவாரம் ஆய்வு செய்த பின்னர் தேவையான மாற்றங்கள் அனைத்தும் செய்யப்படும் என்றார்.
இதனால், ஜிடி நாயுடு பாலத்தில் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை பாதுகாப்பு காரணத்திற்காக 1 வாரகாலம் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்று தெரியவருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications