ஒரு சிலரின் ஆணவம், பதவி வெறியால் அதிமுக படாதபாடுபடுகிறது.. டிடிவி தினகரன் குட்டு!
கோவை: ஒரு சிலரின் ஆணவத்தால், பதவி வெறியால், சுயநலத்தால் அதிமுக படாதபாடு பட்டுவருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இபிஎஸ் கைகள் ஓங்கியுள்ள நிலையில், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோருடன் ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால் இவர்களின் சந்திப்பு விரைவில் நடைபெறும் என்ற சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாதுரையின்114-வது பிறந்தநாள் விழாவையொட்டி இன்று கோவையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினார்.

டிடிவி தினகரன் பேட்டி
இதனைத்தொடர்ந்து டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட இயக்கம் இன்று ஒரு சிலரின் ஆணவத்தால், பதவி வெறியால், சுயநலத்தால் படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கிறது. எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும், விரைவில் சரியாகிவிடும் என்று தெரிவித்தார்.

திராவிட மாடல்
தொடர்ந்து திராவிட மாடல் ஆட்சி என்று மக்களை துன்பப்படுத்துவது முதல்வர் ஸ்டாலின் நிரூபித்து வருகிறார். இதற்கு மக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தல் உரிய பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார். அதேபோல் இந்தி மொழி பற்றி அமித் ஷாவின் கருத்துக்கு, எந்த மொழியையும் வேறு மாநிலத்திலேயும் திணிப்பது தவறான நடவடிக்கை. தமிழக மக்கள் விரும்பு எதையும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று மத்தியில் ஆட்சிய் செய்வோர் புரிந்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன் என்று பதில் அளித்தார்.

மின் கட்டண உயர்வு
மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். ஏற்கனவே சிறு, குறு, நடுத்தர தொழிலாளர்கள் பாதிப்பில் இருக்கிறார்கள். இதில் மின் கட்டண உயர்வு இன்னும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவேளை மின் கட்டணத்தை உயர்த்தி தான் ஆக வேண்டும் என்றால், மக்களை பாதிக்காதவாறு உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

திமுக மீது விமர்சனம்
அதேபோல் கடந்த 4 ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியால், திமுகவுக்கு மக்கள் வாய்ப்பளித்தார்கள். ஆனால் வருங்காலத்தில் தகுந்தி தீர்ப்பை மக்கள் திமுகவுக்கு வழங்குவார்கள். அண்ணா, பெரியார், தமிழ், திராவிடம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி அவர்களது குடும்பத்தைத்தை தான் வளப்படுத்திக் கொள்கிறார்களே, தவிர தமிழகத்துக்கு எந்த பலனும் கிடைத்ததாக தெரியவில்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications