கெத்து காட்டும் கோவை.. நேஷ்னல் லெவலில் டாப் இடம்.. அடடே சூப்பர்.. பொதுமக்கள் ரொம்ப ஹேப்பி
கோவை: தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேசியளவில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை, அரசியல் ரீதியாக மட்டுமின்றி பல்வேறு தொழில்களுக்கும் முதன்மையான ஒரு இடமாக இருக்கிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்னையை நோக்கி வருகின்றனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக பார்த்தோம் என்றால் கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்கள் முக்கிய நகரங்களாக உள்ளது. அதில் குறிப்பாகக் கோவை நகரின் வளர்ச்சி குறித்து தனியாக விளக்க வேண்டும்.

கோவை: மற்ற நகரங்களைக் காட்டிலும் கோவை பல துறைகளை உள்ளடக்கிய வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது. முதலில் கோவை தொழில் நகராக மட்டுமே அறியப்பட்டது. கோவை நகரைச் சுற்றி இருக்கும் தொழிற்சாலைகளே இதற்குச் சாட்சி. அதன் பின்னர் அங்கே கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அதைத் தொடர்ந்து ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கையும் அங்கே அதிகமாக உள்ளது.
இப்போதும் சென்னைக்கு அடுத்து அதிகப்படியான ஐடி நிறுவனங்களைக் கொண்ட தமிழக நகரமாகக் கோவை இருந்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவிலும் கோவைக்கு முக்கியமான இடம் இருக்கிறது. இதன் காரணமாகவே வந்தே பாரத் தொடங்கிப் பல முக்கிய திட்டங்கள் கோவை நகருக்கு முதலில் கொண்டு வரப்படுகிறது. இதற்கிடையே கோவை நகருக்கு மற்றொரு பெருமை கிடைத்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி: மத்திய அரசு நாடு முழுக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. சமீபத்தில் நாட்டிலேயே சிறப்பாகச் செயல்படும் ஸ்மார்ட் சிட்டிகளுக்கான ஆலோசனைக் குழுக் கூட்டம் கோவாவில் நடைபெற்றது. இதில் கோவை மாநகர கமிஷனரும், கோவை ஸ்மார்ட் சிட்டி ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரியுமான எம்.பிரதாப், பொது மேலாளர் எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் சூரத், இந்தூர், அகமதாபாத், ஆக்ரா மற்றும் கோவா ஆகிய நகரங்களின் ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டத் தலைமை நிர்வாக அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஒரே தமிழக நகரம் கோவை தான். இதன் மூலம் தேசியளவில் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் டாப் இடத்தில் இருப்பது உறுதியாகியுள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு நகரத்திலும் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள், நகருக்குத் தேவையான திட்டங்கள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினர். மேலும், ஒவ்வொரு நகரத்திலும் மேற்கொள்ளப்பட்டு வரும் தனித்துவமான பணிகளையும் குறிப்பிட்டுப் பாராட்டினர். இது தொடர்பாகக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் கூறுகையில், "கோவையில் இப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஏரி புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
மற்ற நகரங்கள்: அதேபோல மற்ற நகரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு சில முக்கிய திட்டங்கள் குறித்தும் நாங்கள் நோட் செய்து வைத்துள்ளோம். குறிப்பாக இந்தூரில் மேற்கொள்ளப்படும் கழிவுகளைப் பிரிக்கும் ஆலைகள், சூரத்தின் நீர் சுத்திகரிப்பு ஆலை அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. 280 கோடி ரூபாய் மதிப்பில் அவர்களை அதைக் கட்டியுள்ளனர். அதில் இருந்து அவர்களுக்குக் கணிசமாக வருவாயும் கிடைக்கிறது. இந்த திட்டங்கள் எங்களைக் கவரும் வகையில் இருந்தது.
எதிர்காலத்திற்கான டிஜிட்டலை நோக்கி முழுமையாக மாற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், திட்டங்களை முன்கூட்டியே முடிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.. கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் இதுவரை 90 சதவீத பணிகளை நிறைவடைந்துள்ளது. குறிஞ்சி ஏரி, டவுன்ஹால் மற்றும் காந்திபுரத்தில் உள்ள என்எம்டி காரிடார் திட்டம், பயோ-மைனிங் திட்ட பணிகள் மட்டுமே மீதமுள்ளன, இந்த பணிகளும் ஜூலை மாதத்தில் முடிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications