"தீர்ந்தது ஏக்கம்.." கோவை ஏர்போர்டில் வரும் சூப்பர் வசதி! இனி நோ பிராப்ளம்.. வாவ் செம

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழகத்தில் முக்கிய நகரங்களில் ஒன்றான கோவையில் அமைந்துள்ள ஏர்போர்ட் குறித்து இப்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதனால் கோவை மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்தியாவில் விமானங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. மிடில் கிளாஸ் மக்களின் வருமானம் அதிகரிப்பதும், விமான டிக்கெட்கள் விலை குறைவது உள்ளிட்ட காரணங்களால் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

 Biggest issue in Coimbatore airport will be sorted very soon

கொரோனா காலம் தவிர இந்தியாவில் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. நமது நாட்டில் முக்கிய நகரங்களுக்கு இடையேயான விமானங்கள் எப்போதும் நிரம்பி இருப்பதே இதற்கு முக்கிய சாட்சி.

மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களுக்கு இணையாகக் கோவை, மதுரை உள்ளிட்ட இரண்டாம்கட்ட நகரங்களிலும் விமான போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை வளரும் நகரங்களில் முதன்மையான நகரமாகக் கோவை இருக்கிறது. தமிழ்நாட்டிலும் சென்னைக்கு அடுத்தபடியாக முக்கிய நகரங்களில் ஒன்றாகக் கோவை இருக்கிறது.

கோவை தொழில் நகராக மட்டுமின்றி, ஐடி துறையிலும் சென்னைக்கு அடுத்து முக்கிய இடத்தில் இருக்கிறது. உலகின் டாப் ஐடி நிறுவனங்களும் கூட கோவையில் ஆபீசை வைத்துள்ளனர். அந்தளவுக்கு முக்கிய நகராகக் கோவை இருக்கிறது. ஐடி ஹப்பாக இருப்பதால் கோவையில் விமானத்தில் பணிப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கோவை ஏர்போர்டில் கிட்டதட்ட அனைத்து முக்கிய ஏர்லைன்களும் சேவையை வழங்கி வருகிறது.

நாட்டின் முக்கியமான அனைத்து ஊர்களுக்கு மட்டுமின்றி, ஷார்ஜா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் நேரடி விமானச் சேவை இருக்கிறது. தினசரி பல ஆயிரம் பேர் ஏர்போர்ட்டை பயன்படுத்துகின்றனர். இருப்பினும், கோவையில் விமான பயணிகள் அதிகரிக்கும் அளவுக்கு ஏர்போர்டில் வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோவை ஏர்போர்ட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்தே வருகிறது.

இருப்பினும், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் தொடங்கிப் பல காரணங்களால் ஏர்போர்ட் விரிவாக்கம் தாமதமாகிக் கொண்டே இருக்கிறது. கோவை ஏர்போர்ட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதே கோவை மக்களின் நீண்ட நாள் ஏக்கமாக இருக்கிறது. இதற்கிடையே கோவை ஏர்போர்ட்டில் இப்போது முக்கிய அப்டேட் ஒன்று நடந்திருக்கிறது. கோவை ஏர்போர்டில் பார்கிங் ஒரு பெரிய பிரச்சினையாகவே இருந்து வந்தது.

ஏர்போர்ட் நுழைவுவாயில் அருகே பார்கிங் இருக்கிறது. அரசியல் பிரமுகர்கள் வரும்போது, அவர்களை வரவேற்கவும் வழியனுப்பவும் ஏராளமானோர் உடன் வருகின்றனர். இதனால் முக்கிய நேரங்களில் அங்கே பார்கிங் புல்லாகவே இருக்கும். விரிவாக்கம் செய்யப்பட்டு விமானச் சேவை அதிகரித்தால் இது மேலும் முக்கிய பிரச்சினையாக மாறும். இதனால் கூடுதல் பார்கிங்கை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து கொண்டே இருந்தது.

இதற்குத் தீர்வு காணும் வகையில் கூடுதல் பார்கிங் வசதியைத் தேர்வு செய்து தலைமை அலுவலகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது 200 கார்களை நிறுத்தும் வகையில் பார்கிங் வசதி உள்ள நிலையில், இந்தச் சூழலில் கோவை ஏற்போர்டில் கூடுதலாக 250 கார்களை நிறுத்தும் வகையில் புதிய பார்கிங் வசதியை ஏற்படுத்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

முன்பு ஏர்போர்ட் ஆணையக ஊழியர்கள் குடியிருப்பு இருந்த இடத்தில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அவை காலியாக இருக்கும் நிலையில், அதை பார்கிங் இடமாகப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர் . இந்தத் திட்டம் தலைமை அலுவலகத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. தலைமை அலுவலகம் ஒப்புதல் கிடைத்தால் இதற்கான பணிகளை படுவேகமாக நடக்கும் என்றே கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+