சகோதரி த்ரிஷாவை தவறாக பேசியவர் மீது கடும் நடவடிக்கை எடுங்க.. காவல்துறைக்கு கோரிக்கை வைத்த அண்ணாமலை!
கோவை: கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசியவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அதிமுகவில் ஒன்றிய செயலாளராக இருந்த சேலத்தை சேர்ந்த ஏவி ராஜு என்பவர், 2017ஆம் ஆண்டு கூவத்தூர் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்த போது நடிகைகள் அழைத்து வரப்பட்டதாக தெரிவித்தார். மேலும் நடிகை த்ரிஷா, மற்றும் நடிகர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏவான கருணாஸ் பெயரையும் குறிப்பிட்டு தரக்குறைவாக பேசினார். அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாகப் பரவியது.

ஏவி ராஜுவின் இந்த பேச்சுக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகை த்ரிஷா, தன்னைப் பற்றி அவதூறாக பேசியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். கண்டனங்கள் குவிந்ததை தொடர்ந்து அன்றே திரிஷாவிடம் வீடியோ வாயிலாக மன்னிப்பு கேட்டார் ஏவி ராஜு. எனினும், ஏவி ராஜுவுக்கு நடிகை திரிஷா, இன்று வக்கில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அண்ணாமலை ஆவேசம்: இந்நிலையில் நடிகை த்ரிஷா குறித்து ஏவி ராஜு பேசியதற்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று கோவையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, "கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் சகோதரி த்ரிஷாவை சிலர் தவறாக பேசி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. த்ரிஷாவை தவறாக பேசியவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
சேலம் ஒன்றிய அதிமுக செயலாளராக பணியாற்றியவர் ஏ.வி.ராஜு. இவர் அதிமுகவை சேர்ந்த மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஏ.வி. ராஜுவை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார் ஏ.வி. ராஜு.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா சார்பில் கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்ட விவகாரத்தையும் ஏ.வி. ராஜு எழுப்பினார். அப்போது தான் த்ரிஷா பெயரையும் குறிப்பிட்டு பேசினார் ஏவி ராஜு. ஏ.வி. ராஜுவின் இந்த பேச்சு அரசியல் மட்டுமல்லாமல் திரைத்துறையிலும் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. பலரும் கண்டித்த நிலையில் த்ரிஷா, எச்சரிக்கை விடுத்து பதிவிட்டார்.
ஏவி ராஜூ பல்டி: இதையடுத்து பல்டி அடித்த ஏவி ராஜு, "கூவத்தூர் போயிருந்தபோது அங்கு பேசப்பட்ட சம்பவத்தை தான் வெளியே சொன்னேன். வெங்கடாச்சலம் எம்எல்ஏ திரிஷாவை போல அழகான பெண் வேண்டும் என்றுதான் சொன்னாரே ஒழிய திரிஷா வேண்டும் என்று சொல்லவில்லை. நானும் அப்படிதான் நேற்று சொன்னேன். ஆனால் எனது பேச்சை திரித்து போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண்ணை இவ்வளவு கேவலமாக பேசும் அளவுக்கு நான் தரம் கெட்டவன் இல்லை. எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்." என்று கூறி இருந்தார்.
இந்நிலையில், தன்னைப் பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி திரிஷா அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில், 24 மணி நேரத்துக்குள் ஏ.வி.ராஜு முன்னணி செய்தி நிறுவனங்கள் வாயிலாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் யூடியூப் சேனல்கள் மூலம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே வெளியான அவதூறு வீடியோக்களை அனைத்து தளங்களில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications