சிலுவை.. ஜெபமாலை.. கிறிஸ்துவ மத அடையாளத்தை திடீரென கையில் எடுத்த பாஜக.. கோவையில் பிரச்சாரம்!
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் கிறிஸ்துவ மத அடையாள பொருட்களை வழங்கி பாஜக வேட்பாளர் ஒருவர் பிரச்சாரம் செய்து வந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் நடக்க உள்ளது. இன்று மாலை 6 மணியோடு பிரச்சாரம் முடிய உள்ளது.
இந்த நிலையில் அரசியல் கட்சிகள் கடைசிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. எப்போதும் இல்லாத வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இந்த முறை சுவாரசியமாக நடைபெற்றது.

சுவாரசியம்
பல இடங்களில் வேட்பாளர்கள் சுவாரசியமாக உடை அணிந்து வந்து பிரச்சாரம் செய்தனர். முதல்வர் ஸ்டாலின் போலவும், மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர், கருணாநிதி போலவும் வேடம் அணிந்து பலர் சாலைகளில் பிரச்சாரம் செய்தனர். அதெல்லாம் போக இன்னொரு நடிகர் விஜய் போல தோற்றம் கொண்ட ஒருவர் நேற்று மாஸ்டர் பட கெட்டப்பில் சாலையில் இறங்கி பிரச்சாரம் செய்தார். சாலையில் இவர் வடை சுட்ட சம்பவம் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

அண்ணாமலை
அதேபோல் பாஜக தலைவர் அண்ணாமலை சில இடங்களில் தோசை சுடுவது, இஸ்திரி போடுவது போன்ற பணிகளை செய்து வாக்கு சேகரித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் துணி கடையில் தையல் பணிகளை செய்து வாக்கு சேகரித்தார். இதெல்லாம் போக கோயம்புத்தூரில் பாஜக வேட்பாளர் கார்த்திக் செல்வபுரம் ஹெல்மெட் அணிந்து பிரச்சாரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தினார். மக்கள் சிலர் கல்லால் வீசி அடித்த காரணத்தால் இவர் ஹெல்மெட் அணிந்து இருந்தார்.

ஜெபம்
இந்த நிலையில்தான் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சியில் பாஜக வேட்பாளர் பெரியசாமி கிறிஸ்துவ மத அடையாளம் உள்ள பரிசு பொருட்களை வழங்கி பிரச்சாரம் செய்தார். 8வது வார்டில் இவை போட்டியிடுகிறார். அந்த வார்டில் அதிக அளவில் கிறிஸ்துவர்கள் வசிக்கிறார்கள். சமீபத்தில் அரியலூர் மாணவி வழக்கில் கிறிஸ்துவர்களை பாஜக விமர்சனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கிறிஸ்துவர்கள் பாஜக மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதிருப்தி
இதை அடுத்து கிறிஸ்துவர்களின் வாக்குகளை கவரும் வகையில் சிலுவை, ஜெபமாலை, இரு மெழுகுவர்த்தி ஆகியவற்றை வெள்ளி நிற பிளாஸ்டிக் தட்டு ஒன்றில் வைத்து பாஜக வேட்பாளர் பெரியசாமி என்பவர் கிறிஸ்தவ வாக்காளர்களுக்கு கொடுத்து வருகிறார். கிறிஸ்துவர்களின் வீடு வீடாக சென்று, பாஜகவிற்கு வாக்களியுங்கள்.. உங்களுக்கு தேவையான உதவிகளை, சேவைகளை பாஜக மட்டுமே செய்யும் என்று கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
-
சூலூர் சிறுமி வழக்கு.. சரியான ரூட்டில்தான் போகிறது.. தமிழக அரசை மெச்சிய உயர் நீதிமன்றம்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications