ஆன்லைன் ரம்மியை பாஜக எதிர்க்கிறது.. அதுவே எங்களின் நிலைப்பாடு.. அண்ணாமலை பேட்டி!
ஆன்லைன் ரம்மி தமிழ்நாடு பாஜக எதிர்ப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை: ஆன்லைன் ரம்மியை தமிழ்நாடு பாஜக எதிர்ப்பதாகவும், அதுதான் பாஜகவின் நிலைப்பாடு என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதேபோல் ஆளுநர் திருப்பி அனுப்பிய ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை கடந்த ஆண்டு அக்.19ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது.
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்துக்கு ஏற்கெனவே ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த அவசர சட்டத்தை சட்டமாக்குவதற்கான சட்ட மசோதாவைத்தான் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருந்தது.

ஆன்லைன் ரம்மி தடை மசோதா
இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கோரி அனுப்பப்பட்டது. இந்த சட்ட மசோதா ஆளுநரிடம் கடந்த 4 மாதங்களாக பரிசீலனையில் இருந்தது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக அந்த சட்ட மசோதாவில் சில விளக்கங்களைக் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். ஏற்கனவே ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய பதில் அளித்த நிலையில், மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக எதிர்க்கிறது
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஆன்லைன் ரம்மியை பாஜக எதிர்க்கிறது. அதுதான் கட்சியின் நிலைப்பாடு. நான் கடைசியாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த போது கூட ஆன்லைன் ரம்மி விவகாரம் குறித்து வேண்டுகோள் வைத்தேன். ஆளுநரை பொறுத்தவரை ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தில் தான் தவறு உள்ளது என்று சொல்லி இருக்கிறார்.

சட்டப்பேரவைக்கு வாய்ப்பு
இதன் மூலம் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை சரி செய்ய சட்டப்பேரவைக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒருவேளை மீண்டும் அதே மசோதாவை தமிழ்நாடு அரசு அனுப்பினால், ஆளுநருக்கு வேறு வழியில்லை. அதில் கையெழுத்து போட்டுதான் ஆக வேண்டும். அரசியலமைப்பு சட்டம் அதுதான். இரண்டாவது முறையாக ஆளுநர் கையெழுத்து போட மாட்டேன் என்று சொல்ல முடியாது. ஆனால் இதே சட்டத்தில் ஆளுநர் அது உயர்நீதிமன்றத்திலோ அல்லது உச்சநீதிமன்றத்திலோ தடை செய்யப்படும்.

ஆளுநர் கருத்து என்ன?
ஏனென்றால் இதுவொரு தவறான தடை சட்டம். யாரையோ சமாதானம் செய்வதற்காக தவறான சட்டத்தை கொண்டு வந்து ஆளுநரை நிர்பந்திக்கக் கூடாது. ஆளுநர் திருப்பி அனுப்பிய ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவை பொதுவெளியில் வெளியிட வேண்டும். ஆளுநர் என்ன கருத்து சொல்லி இருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
அடிச்சு தூக்க போகுது தமிழக பாஜக.. இப்படியொரு சடன் மாற்றம்? இங்கே திமுக, அங்கே தவெக! தாங்குமா தாமரை? -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
Aavin: பச்சை நிற பால் பாக்கெட் விவகாரம்! பொய் தகவல் சொல்லும் ஆவின் நிர்வாகம்! அண்ணாமலை கண்டனம் -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
ஓரம்கட்டப்படும் நயினார்.. தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் ராம சீனிவாசன்? அடுத்தது என்ன? -
3 மாதத்திற்குள் கட்சி லான்ச் ஆகும்.. பை-லாவை தயார் செய்யும் அண்ணாமலை.. மிகப்பெரிய முடிவு -
அவிநாசி சாலையில் 5 நாட்களுக்கு அதிரடி மாற்றம்.. கோவை பயனீர் மில் கிட்ட அதை கவனிச்சீங்களா? -
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications