திருந்துங்கள் சூர்யா..! இல்லை என்றால்..? பாஜக பகிரங்க எச்சரிக்கை!
கோவை: நடிகர் சூர்யா திருந்திக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் காலம் அவரை திருத்திவிடும் எனவும் பாஜக விவசாய அணி மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆரம்பக்காலத்தில் பெஸ்ட் ராமசாமியும், கொங்கு ஈஸ்வரனும் இணைந்து தொடங்கிய கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தில் சிறிது காலம் இருந்த அவர் இப்போது பாஜகவில் மாநில பொறுப்பில் இருக்கிறார்.
இந்நிலையில் கொங்கு மண்டலத்தை பூர்விகமாக கொண்ட சூர்யாவுக்கு அவரது சொந்த மண்டலத்திலேயே ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக எதிர்ப்பு கிளம்பியிருப்பது கவனிக்கத்தக்கது.

ஜெய்பீம் திரைப்படம்
இருளர் இனமக்கள் கஷ்டங்களையும், அவர்கள் சந்தித்த துண்பங்களையும் உண்மைத்தன்மையாக வைத்து நடிகர் சூர்யா தயாரிப்பிலும், நடிப்பிலும் ஜெய்பீம் திரைப்படம் வெளிவந்துள்ளது. இந்த திரைப்படத்தில் வன்னியச் சமுதாய மக்களை அவமதிக்கும் வகையில் சில காட்சிகளை வைத்தது ஏன் என போர்க்கொடி உயர்த்தியுள்ள வன்னியர் சமுதாய அமைப்புகளும், பாமகவும் சூர்யாவுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

ஜி.கே.நாகராஜ்
இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்துவிட்டு முதலமைச்சர் ஸ்டாலினில் தொடங்கி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரை அனைவரும் பார்க்க வேண்டிய படம் என பாராட்டியுள்ளனர். இந்த சூழலில் பாஜக மாநில விவசாய அணித் தலைவரான ஜி.கே.நாகராஜ் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ''ஜெய்பீம் திரைப்படம் பார்த்தேன். காவல்துறையால் பாதிக்கப்பட்ட ஒரு பழங்குடி குடும்பத்தின் துயரத்தை, துன்பத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள், வாழ்த்துகள். அன்புமணி ராமதாஸின் கேள்விக்கு உங்கள் பதில் ஏற்புடையதல்ல.''

திருந்துங்க சூர்யா
''திருந்துங்கள் சூர்யா, இல்லையெனில் காலம் உங்களை திருத்தும்'' என எச்சரிக்கும் தொணியில் தனது கருத்தை பதிவிட்டிருக்கிறார். நடிகர் சூர்யாவும், ஜி.கே.நாகராஜும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும் அவர் இவ்வாறு தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். இதனிடையே நடிகர் சூர்யாவின் திரைப்படங்களை திரையரங்குகளில் ஓடவிடமாட்டோம் என வன்னியர் சங்க அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
Recommended Video

சூர்யா அமைதி
ஜெய்பீம் படம் தொடர்பாக அன்புமணிக்கு மட்டும் பதிலளித்த சூர்யா, அதற்கு பிறகு யாருக்கும் இது தொடர்பாக பதில் அளிக்க முன்வரவில்லை. தொடர்ந்து மவுனம் காத்து வரும் நடிகர் சூர்யா, மீண்டும் தனது தரப்பு விளக்கத்தை அறிக்கையாக ஓரிரு நாட்களில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications