தர்ம சங்கடத்தில் அண்ணாமலை.. உத்தம ராமசாமி எங்கே? நில அபகரிப்பு வழக்கில் பாஜக மாவட்ட தலைவர் தலைமறைவு
கோவை: ரூ.500 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமறைவாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் விளாங்குறிச்சி - கொடிசியா அருகே பிஎஸ்ஜி நிறுவனத்தின் பூர்வீக நிலத்தில் 45.82 ஏக்கர் நிலத்தை நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் உபரிநிலம் என அரசு அறிவித்தது அறிவித்தனர். இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதிசெய்திருந்தது. இதற்கு எதிராக பிஎஸ்ஜி குழுமத்தின் வாரிசுகள் சிவக்குமார், பாலாஜி மற்றும் க்ரீன் வேல்யூ ஷெல்டர்ஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் நிலத்தை மீட்க உத்தரவிட்டிருந்தது. நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரமன்லால், "உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அந்த நிலம் மீட்கப்பட்டு அங்கு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.
ஆனால், அங்கு சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கே.ஆர்.ஜெயராம், பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் வீடுகளைக் கட்டி ஆக்கிரமித்து உள்ளனர்." என்றார். இதனை கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுத்து சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை 4 வாரங்களில் அப்புறப்படுத்தி விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் யாத்திரையில் பங்கேற்றபோது உத்தம ராமசாமிக்கு நீதிமன்ற உத்தரவு கிடைத்து அவர் நடை பயணத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இது பாஜகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதை தொடர்ந்து பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி தலைமறைவாகி இருப்பதாக தகவல் வெளியானது. அவர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டதாகவும் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அண்ணாமலை கோவை மாவட்ட பயணத்தை முடித்து நீலகிரி சென்றார்.
அப்போது உத்தம ராமசாமி மீது அரசு நில அபகரிப்பு வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது அண்ணாமலைக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. கோவை மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்தும் உத்தம ராமசாமி நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்?












Click it and Unblock the Notifications