திடீர்னு கண்கலங்கிய எல். முருகன்.. "பட்டியலின குடும்பத்தில் இருந்து வந்த என்னை".. என்னாச்சு?
பாஜகவை புகழ்ந்து எல்.முருகன் கோவையில் பேட்டி தந்துள்ளார்
கோவை: பட்டியலின குடும்பத்தில் இருந்து வந்தவன் நான்.. ஆனால், என்னை மத்திய அமைச்சராக்கியது பாஜகதான் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நா தழுதழுக்க உருக்கத்துடன் கூறியுள்ளார்.
எம்பி தேர்தலுக்கு தமிழக பாஜக தயாராகி கொண்டிருக்கிறது.. அந்த வகையில் பல்வேறு வியூகங்களை கையில் எடுத்துள்ளது..
அதன்படி, மக்கள் ஆசி யாத்திரையை துவங்கி உள்ளது.. மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாகவே இந்த யாத்திரை நடக்கிறது.. இன்று முதல் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் 3 நாட்கள் யாத்திரை நடக்க உள்ளது.

கூட்டம்
இதில் கலந்து கொள்வதற்காக எல்.முருகன் கோவை வந்திருந்தார்.. காமராஜபுரம் பகுதியில் மக்கள் ஆசி யாத்திரையை முன்னிட்டு கூட்டமும் நடத்தப்பட்டது... முருகன் உட்பட, மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன், குஷ்பு உட்பட பாஜகவின் முக்கிய நி்ர்வாகிகள் பலரும் இதில் பங்கேற்றனர்.

அருந்ததியர் சமூகம்
இந்த கூட்டத்தில் முருகன் பேசியதாவது: 'காங்கிரஸ், திமுக கட்சியில் தொடர்ந்து மத்தியில் ஆட்சியில் இருந்தனர்... ஆனால், அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த ஒருவரை மத்திய அமைச்சராக ஆக்கியதில்லை... அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த என்னை, எந்த கட்சியும் செய்ய துணியாத செயலாக மாநி லதலைவராக்கியது பாஜகதான்..

பட்டியல்
எந்த சமூகத்தில் இருந்து அமைச்சரே வராமல் இருந்தார்களோ அந்த சமூகத்தை சேர்ந்த என்னை அமைச்சராக்கியது பாஜக. பட்டியல் இன மக்கள் அமைச்சர்கள் 12 பேர், பழங்குடியின அமைச்சர்கள் 8 பேர், பிற்படுத்தபட்ட சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள் 28 பேர் இருக்கிறார்கள்.. ஆனாலும், செருப்பு தைக்கும் குடும்பத்தில் இருந்து வந்தவன் நான்..

எதிர்க்கட்சி
என்னை மத்திய அமைச்சராக்கியது பாஜக... காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சியினர் எங்களை இரு அவைகளிலும் அறிமுகம் செய்து வைக்க விடவில்லை.. பட்டியல் இனத்தை சேர்ந்த என்னை, எந்த அவையிலும் உறுப்பினர் இல்லாத ஒருவரை அமைச்சராக நியமித்திருப்பது இதுவே முதல் முறை..

பாராட்டு
சாதாரண குடும்பத்தில் இருந்த வந்த எங்களை, பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்து வைப்பார்கள் என்ற என ஆர்வத்துடன் இருந்தோம்... ஆனால், எங்களை அறிமுகம் செய்து வைக்க கூடாது என கெட்ட எண்ணத்தில் அவையில் காங்கிரஸ், திமுக, காங்கிரஸ் உட்பட எதிர்கட்சியினர் பிரச்சினையை கிளப்பி அறிமுகம் செய்து வைக்க முடியாத நிலையை ஏற்படுத்தினர்... இந்தியா முழுவதும் 40 அமைச்சர்களும் மக்களை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கும் நிகழ்வில் இருக்கின்றோம்" என்றார்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications