"ஒரே நாடு ஒரே தேர்தல்" திறந்த மனதுடன் பரிசீலிக்க வேண்டும்! தவெக விஜயை வலியுறுத்தும் வானதி சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

கோவை : ஒரே நாடு, ஒரே தேர்தல் விஷயத்தை திறந்த மனதுடன் தவெக தலைவர் விஜய் பரிசீலிக்க வேண்டும் எனவும், அரசியல் கட்சிகள் ஒரு விஷயத்தை சொல்லுகின்றனர் என்றால் அதையும் விஜய் பேச வேண்டும் என்று அவசியம் இல்லை, அதை ஸ்டடி பண்ண வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தை கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

vanathi srinivasan vijay one nation one election

அப்போது பேசிய அவர்,” நாளையும் நாளை மறுதினமும் தமிழக முதல்வர் கோவை வருகிறார். ஏற்கனவே அவர் கோவை வந்த பொழுது கோவை தொடர்பான கோரிக்கைகள் அவரிடம் கொடுத்திருந்தோம். அதில் ஒரு சில விஷயங்களுக்கு அரசின் சார்பில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது.


கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தி அரசிடம் ஒப்படைக்கப்படும் பொழுது, ஒரு சில இடங்கள் முழுமையாக காலி செய்யப்படாமல் இருக்கின்றது. நில உரிமையாளர்கள் அதில் இருக்கின்றனர். அதனால் பணிகளை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. நிலத்தை ஒப்படைக்கின்ற பொழுது முழுமையாக காலி செய்து ஒப்படைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை வரும் முதல்வரிடம் கேட்க இருக்கிறோம் எனவும், அவர்களை மத்திய அரசு வெளியேற்ற முடியாது எனவும் தெரிவித்தார்.

மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மாநில அரசு நிறைய தகவல்களை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டி இருக்கிறது. உடனடியாக கேட்கின்ற தகவல்களை தமிழக அரசு கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த பேருந்து நிறுத்தத்தில் முதல்வர் படம் புறக்கணிக்கப்படவில்லை. எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அதை செய்து இருக்கின்றனர். இதை நாங்களா நேரடியாக காட்டுகின்றோம். அதிகாரிகள்தான் சொல்வதை நாங்கள் செய்திருக்கிறோம்.

விஜய் குறித்து சீமான் சொல்லியுள்ள கருத்துக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இன்னொரு தலைவரின் கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என துணை முதல்வர் சொன்னார். அந்த ரகசியம் தெரியும் என சொன்னார். மூன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் மக்களுக்கு தெரியவில்லை. எது சாத்தியம் இருக்கிறது என்பதை நாங்கள் மக்களிடம் சொல்வோம் .அரசியல் கட்சி மக்களிடம் கொடுக்கும் வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியுமா என்பதை பார்கக வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மொழி சார்ந்த விஷயங்களில், உணவு சார்ந்த விடயங்களில் எல்லாம் மத்திய அரசு தலையிடுவதில்லை , வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் பாஜகவின் லட்சியம். திருவள்ளுவருக்கு வர்ணம் பூசுவது அவரவர் விருப்பம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவரின் புகைப்படம் எப்படி இருந்தது என்பதை நாம் பார்க்கிறோம்

நாளை மறுதினம் நேரில் வரும்பொழுது முதல்வரை நேரில் சந்திக்க இருக்கிறோம். கடந்த முறை சந்தித்த பொழுது வைக்கப்பட்ட கோரிக்கைகளை பொறுமையாக முதல்வர் கேட்டார். கோரிக்கைகளை முதல்வர் செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களிடம் கருத்து கேட்டு அதற்கு என்று அமைக்கப்பட்ட குழு அரசிடம் அறிக்கை கொடுத்திருக்கிறது. இதில் இருக்கும் சாதக, பாதகங்களை ஒரு அரசியல் கட்சி யோசித்து பார்க்க வேண்டும். எல்லாரும் சொல்கின்றனர் என்று பேசக்கூடாது. விஜய் இதை எதிர்க்கிறார் . அவரைப்போலவே பல கட்சியினரும் சொல்கின்றனர். மத்திய அரசு இதை எப்படி மக்களிடம் எப்படி தெளிவாக சொல்கின்றது என்பதை பார்க்கலாம்.

விஜய் அவர்களும் ஒரே நாடு ஒரே தேர்தல் விஷயத்தை திறந்த மனதுடன் பரிசீலிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் ஒரு விஷயத்தை சொல்லுகின்றனர் என்றால் , அதையும் விஜய் பேச வேண்டும் என்று அவசியம் இல்லை. அவர்கள் அதை ஸ்டடி பண்ண வேண்டும்,

கோவைக்கு முதல்வர் வருவதால் சாலை போட்டால் அது நல்லது தான். அடிக்கடி முதல்வர் கோவை வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அப்படியாவது கோவை மக்களுக்கு சாலை வசதிகள் கிடைக்கும். 200 கோடிக்கு அவர்கள் கணக்கு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+