"விபச்சாரி மகனா".. ஆ. ராசா வீசிய குண்டு.. பாஜக டென்ஷன்.. கோவிலுக்கு போறீங்களே! எகிறிய அர்ஜுன் சம்பத்
ஆ ராசா மீது நடவடிக்கை தேவை என்று அர்ஜூன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்
கோவை: ஆ.ராசாவின் பேச்சு, முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தையும் விமர்சிப்பதாக உள்ளது.. நாங்களா ஹிந்துவிரோதிகள்? விரைவில் போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் காட்டமாக கூறியுள்ளார்.
ஆ.ராசா பேசிய வீடியோ ஒன்றை மாநில தலைவர் அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்..
இதற்கு பாஜக தரப்பு கேள்வி எழுப்பி வருகிறது... அத்துடன் அண்ணாமலை உட்பட பல்வேறு இந்து மத தலைவர்கள் இதற்கு கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

விபச்சாரி மகன்
அதில், "தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார். ஆனால், பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட திமுக அதில் இருந்து விலகி ஜனநாயகத்துக்காக, இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்... சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன். இந்துவாக, இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன். எத்தனை, பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்" என்று ராசா பேசியிருக்கிறார்.. இதற்கு தமிழக பாஜக, சென்னையில் டிஜிபியிடம் புகார் தந்துள்ளது.

கரு.நாகராஜன்
பாஜக மூத்த தலைவர் கரு.நாகராஜன் நேற்று முன்தினம் ஒரு பேட்டி தந்திருந்தார்.. "நீ இஸ்லாமியனாக பிறந்தால், நல்ல தாய் பெற்ற மகன்.. நீ கிறிஸ்துவனாக இருந்தால் நல்ல தாய் பெற்ற மகன்.. ஆனால் நீ இந்துவாக இருந்தால் விபச்சாரியின் மகன் என்று பொதுமேடையில் சுட்டிக்காட்டி பேசுகிறார்.. இதைவிட ஒரு கேவலம் இந்து மக்களுக்கு, ஆன்மீகம் தழைத்த இந்த பூமிக்கு, தமிழக மக்களுக்கு, பக்தர்களுக்கு, கடவுளை வணங்குபவர் ஒவ்வொருவருக்கும் இதைவிட வேறு அவமானம் இருக்க போவதில்லை..

விபூதி
தமிழக முதல்வர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.. திமுகவை விட்டே அவரை நீக்க வேண்டும்.. இல்லாவிட்டால் ஸ்டாலின் சொல்லித்தான் அவர் இப்படி பேசுகிறார் என்று அர்த்தம் கொள்ளப்படும்.. நீ அரசியல் மட்டும் செய்.. கடவுளை நிந்திப்பவன் என்னைக்குமே நல்லா வாழ முடியாது.." என்றார். அதேபோல, இந்து முன்னணி கட்சியோ ஒரு படிமேலேபோய், ஜனாபதியிடமே புகார் கொடுக்க போவதாக சொல்லி உள்ளார்கள்..

காடேஸ்வரா சுப்ரமணியம்
அக்கட்சியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் இது தொடர்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில், "சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த விழாவில் எம்பி ராஜா, ஹிந்துக்கள் குறித்து இழிவாக பேசினார். பதவியேற்கும் போது, எந்த மதத்தையும் இழிவுபடுத்த மாட்டேன் என்றும், யாருக்கும் பாரபட்சமாக நடக்க மாட்டேன் என்றும் காப்பு பிரமாணம் செய்து விட்டு, ஹிந்து மதத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார். அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்க மாட்டேன் என்கிறார் ராஜா.

90% ஹிந்துக்கள்
மக்களிடையே பிரிவினையையும், வெறுப்புணர்வையும், தொடர்ந்து இதுபோன்று பேசி வரும் இவர், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தில், திமுகவில் 90 சதவீதம் ஹிந்துக்கள் இருப்பதாக சொன்னார்.. ஆனால், ஆட்சி அமைத்த பிறகு, திமுக அரசு எந்த மதத்தையும் சார்ந்து ஆட்சி புரியாது, யாரையும் புண்படுத்தாது என்று கூறியதை ஏற்க மறுக்கிறாரா? இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், காப்பு பிரமாணத்தையும் காற்றில் பறக்க விட்டு, தான்தோன்றித்தனமாக செயல்படும் எம்பி ராஜாவின் பதவியை பறிக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் முறையிட உள்ளோம்" என்று கூறியிருந்தார்.

ஹிந்து விரோதிகள்
இப்போது இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. அன்னுாரில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னதாவது: "சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் எம்பி ராசா, ஹிந்துக்கள் குறித்து இழிவாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... முதல்வர் ஸ்டாலின், 'எங்கள் கட்சியில் ஒரு கோடி இந்துக்கள் உள்ளனர். நாங்கள் ஹிந்து விரோதிகள் அல்ல. எங்களை சிலர் ஹிந்து விரோதிகள் என தவறாக சித்தரிக்கின்றனர்' என்று சொல்லியிருந்தார்.

துர்கா
முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தியுள்ளார்... முதல்வரின் மருமகன் சபரீசன், திருச்செந்தூரில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தியுள்ளார்... ராசாவின் பேச்சு, முதல்வர் குடும்பத்தையும் விமர்சிப்பதாக உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்... இந்துக்களின் மத உணர்வை புண்படுத்திய ராசாவை கண்டித்து, இந்து மக்கள் மக்கள் கட்சி சார்பில், போலீசில் புகார் அளித்து, ஜனநாயக முறையில் அறப்போராட்டம் நடத்தப்படும்" என்று கூறியுள்ளார்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு!












Click it and Unblock the Notifications