கோவை குண்டுவெடிப்பு.. அன்று என்ன நடந்தது? மிக கவனமாக கேட்டறிந்த பிரதமர் மோடி! வெளியான தகவல்
கோவை: கோவையில் ரோட்ஷோவின் போது பிரதமர் மோடி கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்களை அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாகத் தமிழகத்தில் பாஜக தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது.

இன்று மாலை கோவையில் பாஜக சார்பில் ரோட் ஷோ நடைபெற்றது. இதற்காகக் கர்நாடக மாநிலத்தில் இருந்து கோவை வந்த பிரதமர் மோடி, கோவை சாய்பாபா கோயிலில் இருந்து ரோட் ஷோவை ஆரம்பித்தார்.
ரோட் ஷோ: மொத்தம் 2.5 கி.மீ தொலைவுக்கு இந்த 'ரோட் ஷோ' திட்டமிடப்பட்டது. பிரதமரைக் காணக் குவிந்த பொதுமக்கள், இரண்டு பக்கமும் அவருக்கு உற்சாக வரவேற்பைக் கொடுத்தனர். மேலும், அங்கே தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கே திரண்டு இருந்த பொதுமக்களிடம் காரில் சென்றபடியே பிரதமர் மோடி வாக்கு கேட்டார். அப்போது காரில் அவருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதைத் தொடர்ந்து 1998ஆம் ஆண்டில் நடந்த கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் படத்திற்குப் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். கோவை ஆர்எஸ்புரம் தலைமை தபால் நிலையம் அருகே உயிரிழந்தோர் போட்டோக்கள் வைக்கப்பட்டு இருந்த நிலையில், பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். பிரசார வாகனத்திலிருந்து இறங்கிய பிரதமர், காலணிகளைக் கழற்றிவிட்டு வெறும் காலுடன் சென்று, அஞ்சலி செலுத்தினார்.

கவனமாகக் கேட்டேன்: இதற்கிடையே மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் இது குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இது தொடர்பாகப் பிரதமர் தரப்பில் எதுவும் சொல்லவில்லை. அவர் வருவதால் கட்சியில் இருந்து கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் என்ன நடந்தது என்பதைப் பிரதமரிடம் விளக்குமாறு அண்ணாமலை கூறியிருந்தார். அந்த குண்டுவெடிப்பு நடந்த போது நான் கோவையில் இருந்தேன். அப்போது மேடையிலேயே இருந்தேன். நானும் கூட அப்போது தாக்கப்பட்டேன்.
இந்த விவகாரத்தில் நான் சம்பந்தப்பட்ட நபர் என்பதால் பிரதமர் மோடியிடம் இதை விளக்கினேன். அனைத்தையும் கவனமாகக் கேட்ட பிரதமர் மோடி, இது குறித்து தனக்கு ஏற்கனவே தெரியும் என்றார். அதன் பின்னரே என்னையும் அழைத்து மலர் அஞ்சலி செலுத்தச் சொன்னார்.
நாங்கள் தான் எதிரி: சாதாரண மனிதர்கள் அனைவருமே பயங்கரவாதத்திற்கு எதிரி தான். அதில் குறிப்பாக பாஜக உக்கிரமான எதிரி. அதற்கு இரண்டு காரணம் இருக்கிறது. ஒன்று பயங்கரவாதம் என்பது மனிதக் குலத்திற்கே எதிரானது. மற்றொன்று இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது பாஜகவும் அதன் சகோதர இயக்கங்களும் தான். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது என்பதற்காகவே அஞ்சலி செலுத்துகிறோம்.
பிரதமர் மோடி இங்கே வரும் போது கோவை குண்டுவெடிப்பில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். உடனடியாக பிரதமர் மோடியும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார். அதேபோல வந்தார் மலர் அஞ்சலி செலுத்திவிட்டுக் கிளம்பினார். பாஜகவைப் பொறுத்தவரைச் சாதாரண தொண்டர் முதல் பிரமதர் வரை அனைவரிடமும் இந்த பயங்கரவாத எதிர்ப்பு சிந்தனை இருக்கும். பேரணியின் அங்கமாகவே இதைத் திட்டமிட்டோம். அதன்படியே அவர் அஞ்சலி செலுத்தினார்" என்றார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications