பாஜக மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது - டெல்லி செல்லும் முன்பு அண்ணாமலை பேட்டி
கோவை: கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழக பாஜக தலைவர் பதவி என்பது வெங்காயம் மாதிரி என்று அண்ணாமலை கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, என் மீது இரண்டரை ஆண்டுகளாக எல்லோரும் கல் வீசுகிறார்கள் என்றும் கருத்துக்கள் அனைத்தையும் வரவேற்கிறேன் எனவும் பேசினார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியதாவது:- மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் மாதிரி... இதை ஏற்கனவே ஒரு இடத்தில் நான் சொல்லியிருப்பேன்.. உரித்து பார்த்தால் உள்ளே ஒன்னும் இருக்காது.

அரசியலில் நான் எப்போதுமே பதவிக்காக வந்தவன் இல்லை. பதவியை தூக்கி போட்டு வந்தவன் நான். இதை விட அதிகமாக 10 ,15 மடங்கு பவரை பார்த்தவன் நான். போட்டா போட்டி இது அது.. நான் நிம்மதியாக என் வாழ்க்கையை வாழ்கிறேன். எனக்கு பிடித்ததை செய்கிறேன். . நேற்று தோட்டத்திற்கு போனேன். ஆடு மாட்டை பார்த்தேன் எனக்கு என ஒரு தனி உலகம் இருக்கிறது. அந்த குட்டி உலகத்தில் நான் வாழ்கிறேன்.
அரசியலில் என் கருத்துக்களை எப்போதும் விட்டு கொடுக்க மாட்டேன். மாற்றி பேசிதான் இருக்கனும் என்றால் இருக்க போவது இல்லை. மாற்றி பேசி அண்ணாமலை இருக்க போவது இல்லை. என்னுடைய தனி உலகத்தில் ஒரு சூழலில் அரசியல் பண்ணிக்கொண்டு இருக்கிறேன். மோடிக்காக அரசியலில் வந்து இருக்கிறேன். அண்ணாமலையிடம் அட்ஜெஸ்மண்ட் பாலிடிக்ஸ் எப்போதுமே கிடையாது.
ஒரு கருத்தை எடுத்தால் உடும்பு பிடி மாதிரி பிடிப்பேன். இன்னைக்கு அந்த கருத்துக்கு நேரம் இல்லை என்றால் 5 வருடம் கழித்து அந்த கருத்துகான நேரம் வரத்தான் போகிறது. என்னை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன். எனக்காக வேண்டும் ஆனால் சிலர் பேர் மாறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
-
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜக, ஆர்எஸ்எஸ் பெயர்கள் இல்லாத புதிய அரசியல் முகமூடி! அண்ணாமலை பிளான் பி! மாணிக்கம் தாகூர் சூசகம் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை பேட்டி.. டிசம்பர் 2025-லேயே விலக முடிவு செஞ்சேங்க.. அப்போ அமித் ஷா சொன்னது என்ன தெரியுமா? -
இணையதளம் இதுதான்.. அண்ணாமலை அரசியல் இயக்கத்தில் இணைவது எப்படி? வெளியான அறிவிப்பு












Click it and Unblock the Notifications