திராவிட மாடல் காலி டப்பா.. பாஜகவை திட்டுவதற்காக கட்சி நடத்துகிறார்கள்.. வானதி சீனிவாசன்
கோவை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. தமிழ்நாட்டில் கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டன. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். கடந்த வாரம் தமிழ்நாடு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி திமுக அரசை விமர்சித்திருந்தார். அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் டப்பா என்ஜின் என்று விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள வானதி சீனிவாசன் திராவிட மாடல் அரசு தான் காலி டப்பா அரசாக உள்ளது என்று கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை அடுத்த புங்கம்பாளைம் பகுதியில் குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, சீண்டல்கள், கொள்ளைகள், கொலைகள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

திராவிட மாடல் தான் காலி டப்பா
தமிழகம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம், தமிழ்நாடு அமைதி பூங்கா என கூறுவது அரசுக்கு எதுவும் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது. மேலும் முதல்வர் அப்படி ஒரு விஷயம் நடக்காதது போல கூறி கொள்வது வேடிக்கையாக உள்ளது. பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இணைந்த கூட்டணியை டப்பா என்று திமுக விமர்சித்து வருகிறது. திராவிட மாடல் அரசு என கூறிக்கொண்டு வெற்று விளம்பரங்களையும், ஸ்டிக்கர் ஒட்டி அறிவிப்புகளையும் மட்டும் வெளியிடும் திமுகவின் திராவிட மாடல் அரசு தான் டப்பா மாடல் அரசு.
ஸ்டாலின் என்ன செய்தார்
மேலும் தமிழ்நாட்டுக்கு அமெரிக்காவின் வரி விதிப்பால் முடங்கிய கோவை திருப்பூர் போன்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட பின்னலாடை தொழிலை மீட்டெடுக்க யூரோபிய நாடுகளுடன் புதிய ஒப்பந்தம் மேற்கொண்டு மீண்டும் தொழிலை மேம்படுத்தி உள்ளார். அதற்காக பலமுறை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாங்கள் சந்தித்து தொழில்துறையினரையும் அழைத்து சென்று குறைகளை செய்து கொடுத்துள்ளோம்
ஜவுளித்துறை உற்பத்தி மாநாட்டில் பேசும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் ஜவுளித் துறைக்கு என்ன செய்தார்கள். மத்திய அரசையும் பாஜகவையும் விமர்சிக்கவே திமுக ஆட்சி நடத்துகிறது. மேலும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வருகை தேர்தல் பணிக்காக வழக்கமான பணி தான் இனி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் அதிமுக பாஜக கூட்டணி கட்சிகள் இணைந்து செயல்படும்" என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications