கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நம்ம வானதியா இது.. டக்கென வேனில் இருந்து எகிறி குதித்து, கலாய்த்து.. அப்டியே பூரித்துபோன கோவை தெற்கு

நடிகை நமீதா வானதி சீனிவாசனுக்காக பிரச்சாரம் செய்தார்

Google Oneindia Tamil News

கோவை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்காக நடிகை நமீதா இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

Recommended Video

    கோவை: மச்சான்ஸ்… தாமரைக்கு ஓட்டு போடுங்க... பாஜகவுக்காக நமிதா ஜிலுஜிலு பிரச்சாரம்!

    கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் களமிறங்கி உள்ளார்.. மநீம தலைவர் கமல்ஹாசனும் இங்கு போட்டியிடுவதால், ஸ்டார் அந்தஸ்தை இந்த தொகுதி பெற்று வருகிறது.

    கமலுக்கும், வானதிக்கும் போட்டியும் பலமாக இருக்கிறது.. இருவருமே செல்வாக்கு மிக்கவர்கள்.. இருவருமே பிரபலமானவர்கள் என்பதால், இப்போது வரை இந்த தொகுதியின் வெற்றி யாருக்கு என்பதை குத்துமதிப்பாக கூட சொல்ல முடியவில்லை.

    வானதி

    வானதி

    கமல், தனக்கு தானே பிரச்சாரம் செய்து கொண்டு, வாக்கு சேகரித்து வருகிறார்.. ஆனால், வானதி தேசிய பொறுப்பில் இருந்தாலும், கட்சியில் சீனியர் என்றாலும்கூட, அவருக்கு ஆதரவாக பலர் கோவைக்கு வந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

    நமீதா

    நமீதா

    ராதாரவி வந்து போனார்.. இன்று நமீதா வந்துள்ளார்.. மற்றவர்கள் பிரச்சாரம் செய்ததைவிட, நமீதாவின் பிரச்சாரம் கோவையை இன்று ஒரே நாளில் கலக்கிவிட்டது.. கவர்ச்சி அரசியலை நம்பி களம் கண்டு வரும் பாஜகவுக்கு, இதுபோன்ற நடிகைகளின் ஆதரவும் ஓரளவு பலத்தை சேர்த்து வருகிறது. இன்றைய தினம் கோவைக்கு வந்திருந்தார் நமீதா..

     பாட்டு

    பாட்டு

    பிரச்சார வேனில் நமீதா, வானதி சீனிவாசனும் நின்று கொண்டு அந்த பகுதிகளில் வாக்கு சேகரித்தபடி வந்தனர்.. அப்போது, திடீரென பாஜகவின் ஐடி பிரிவின் "வாத்தி கம்மிங்" பாட்டு போடப்பட்டது.. இந்த பாடலை கேட்டதுமே சுற்றியிருந்த இளைஞர்கள் டான்ஸ் ஆட ஆரம்பித்தனர்..இதை பார்த்ததும், வானதியும், நமீதாவும் பிரச்சார வேனில் இருந்து இறங்கிவிட்டனர்.. அந்த பாட்டுக்கு, அந்த பாடலில் உள்ள ஃபேமஸ் ஸ்டெப்பை இருவருமே ஆடினர்.. இவர்களை பார்த்ததும் அவர்களுடன் வந்திருந்த பாஜக நிர்வாகிகள் சிலரும் ஆட ஆரம்பித்தனர்.. இதனால் சுற்றியிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர்.

     கடவுள் நம்பிக்கை

    கடவுள் நம்பிக்கை

    நமீதா இன்று பொதுமக்கள் முன்னிலையில் பேசும்போது, "5 வருஷமாக மோடியின் திட்டங்களை இந்த தொகுதி முழுவதும் கொண்டு சேர்த்தவர் வானதி சீனிவாசன்.. திருவிழா பண்டிகை காலங்களில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு டிரஸ் எடுத்து தந்து உதவி செய்திருக்கிறார்.. அப்படி இருக்கும்போது, இந்த தொகுதியில் நிற்கும் நம்பிக்கை இல்லாத ஒருத்தரை நம்பி எப்படி ஓட்டு போடுவது? தமிழகம் கலாசாரம், கடவுள் நம்பிக்கை உள்ள பூமி. அந்த கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவரை நம்பி நீங்கள் எப்படி ஓட்டுப் போட முடியும்?

    கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

    இங்கியே பிறந்து, இங்கியே வாழ்ந்து வரும் வானதி சீனிவாசனுக்கு ஓட்டு போடுங்கள்.. அப்படி ஓட்டு போட்டு, வானதி சீனிவாசனை வெற்றி பெற வைத்தால், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் வீடு தேடி வரும்" என்றார். நமீதா இப்படி பேசிக் கொண்டே இருக்கும்போது வானதி குறுக்கிட்டார்.. "நீங்க எல்லாரும் நமீதாவிடம் இருந்து அந்த ஒரு வார்த்தையை ரொம்ப ஆவலா எதிர்பார்ப்பீங்கன்னு தெரியும்" என்று சொல்லிய வானதி நமீதாவிடம் திரும்பி, "அந்த வார்த்தையை சொல்லுங்க" என்றார்.

     பிரச்சார வேன்

    பிரச்சார வேன்

    உடனே மைக்கை எடுத்த நமீதா.. "மச்சான்ஸ்" தாமரக்கு ஓட்டு போடுங்க. தமில்நாட்டில் தாமர மலரும்" என்றார். இதைக்கேட்டு பொதுமக்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.. ஆனால், பிரச்சார வேன் அங்கேயே தொடர்ந்து நின்று கொண்டிருக்கவும், "இப்படியே மெய் மறந்துடாதீங்க.. நாங்க போகணும்.. அடுத்து எங்கே போகணும்னு சொல்லுங்க" என்று கட்சிக்காரர்களிடம் கேட்டார். இப்படி ஒரே நாளில் களை கட்டியது தெற்கு கோவை.

    English summary
    Namithas Election Campaign in Coimbatore and slams Kamalhasan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X