அண்ணா பல்கலை மோசடி விவகாரம்.. அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த வானதி சீனிவாசன்
கோவை: சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பலர், ஆதார் எண்ணை தவறாகப் பயன்படுத்தி முறைகேடாக பல கல்லூரிகளில் பணியாற்றிய தகவல் வெளியாகி சர்ச்சையானது. மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை தெற்குத் தெகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது: தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் 480-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

ஆதார் எண்ணை தவறாக பயன்படுத்தி பேராசிரியர்கள் பலர், முறைகேடாக பல கல்லூரிகளில் பணியாற்றிய தகவல் வெளியாகி சர்ச்சையானது. இந்த முறைகேட்டில் 800 பேர் வரை ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதில் 353 ஆசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றி மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்நிலையில், இந்த மோசடிக்கு காரணமான அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர்கள் இரண்டு பேர், மூன்று பேராசிரியர்கள் உட்பட 10 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC) வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொறியியல் படிப்பு என்பது ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கனவு. அந்த கனவை நனவாக்க அண்ணா பல்கலைக்கழகமும், தமிழ்நாடு அரசும் உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, மோசடிகளுக்கு துணை நின்று மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட காரணமாக இருக்கக் கூடாது.
எனவே ,அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள், மற்றும் அதற்கு காரணமானவர்கள் எந்த உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இதுபோன்ற மோசடிகள் நடக்காதவாறு அரசு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications