உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு பாஜக வரவேற்பு.. வானதி சீனிவாசன், திருப்பதி நாராயணன் வெளியிட்ட பதிவுகள்

Subscribe to Oneindia Tamil

கோவை: பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "உதயநிதி ஸ்டாலின் கைது இனி பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும் ஒவ்வொருவருக்கும் தக்க பாடம். சட்டத்தின் மீதான நம்பிக்கை ஒவ்வொரு தருணங்களிலும் நாட்டு மக்களுக்கு நிரூபிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது. அதேபோல், தமிழ்நாட்டுப் பெண்களை அவதூறாகப் பேசுபவர்கள் மற்றும் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்பவர்கள் மீது எவ்வித பாகுபாடின்றி இதேபோன்ற கடுமையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் பட்சத்தில் முதல்வர் விஜய் அவர்களின் இந்த நடவடிக்கையை வரவேற்கலாம்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "மேகதாது - காவிரி பிரச்சனைக்காக தஞ்சையில் திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இரட்டை அர்த்தப்படும்படியான தரங்கெட்ட வார்த்தைகளை பேசியதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

BJP welcomes Udhayanidhi Stalin s arrest posts released by Vanathi Srinivasan and Thirupathi Narayanan

இது போன்று பேசும் திமுகவினரின் நாகரீகமற்ற, பொறுப்பற்ற அரசியலுக்குத்தான் மக்கள் ஆட்சியிலிருந்து அகற்றினார்கள். அப்படியும் திமுக திருந்தவில்லை. 75 ஆண்டுகால அரசியல் இயக்கம் இப்படித்தான் தனது கட்சி மேடைப் பேச்சாளர்களை உருவாக்கி வருகிறதா?

எதிர்க்கட்சி என்பது தமிழக நலனுக்காகவும், ஆட்சிக்கான நல்ல ஆலோசனைகளையும் வழங்கி ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டுமே தவிர அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசி அரசியல் செய்யும் இவர்கள் என்று திருந்தப் போகிறார்களோ?

திமுகவினரின் இந்த அநாகரிகப் போக்கை ஒட்டுமொத்த தமிழகமும், குறிப்பாக பெண்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த கேவலமான பேச்சைத் திரும்பப் பெற்று, உடனடியாக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!" இவ்வாறு கூறியிருந்தார்.

பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயணன் கூறுகையில் யாரும் இப்படிப் பேசத் துணியக்கூடாது. முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி இவ்வளவு இழிவான வார்த்தைகளைப் எப்படிப் பேச முடியும்! இதை ஸ்டாலினே கண்டித்திருக்க வேண்டும் என்று கூறினார். முன்னதாக வெளியிட்ட பதிவில், உதயநிதி ஸ்டாலின் கைது வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது. தைரியமான இந்த கைது நடவடிக்கையானது, இனி தமிழகத்தில் வேறு யாரும் பெண்கள் குறித்து கேவலமாக, தரக்குறைவாக பேச முயற்சிப்பதை தடுக்கும். பேச்சுரிமையா அல்லது பெண்களின் கண்ணியமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்! என்று கூறியிருந்தார்.

ருப்பதி நேற்று வெளியிட்ட பதிவில், "தஞ்சாவூரில் திமுகவின் உதயநிதி ஸ்டாலினின் முதலமைச்சர் விஜய் - திரிஷா குறித்த இரட்டை அர்த்த பேச்சு அருவெறுக்கதக்கது, ஆபாசமானது , கேவலமானது, வெட்கக்கேடானது. உண்மையிலேயே தாய், மனைவி, மகள் உள்ள ஒரு புறம்போக்கு-களவாணி கூட இப்படி கேவலமாக பேச மாட்டான். அப்படி பேசுபவர்களை எந்த தாயும், மனைவியும், மகளும் மன்னிக்க மாட்டார்கள். ஆனால் 'திராவிட மாடல்' என்று சொல்லிக்கொண்டு கேடுகெட்ட ஜென்மங்கள் இப்படி பொதுவெளியில் பேசுவதை முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது. மார்க்கண்டேயனை கைது செய்ததை விட இந்த தரங்கெட்ட பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலினை கைது செய்து சிறையிலைடப்பது தவெக அரசுக்கு பெருமை சேர்க்கும். நீதிமன்றங்கள் இந்த பேச்சுக்கு தண்டனை அளிக்குமா அல்லது பிணை வழங்குமா என்பதை பார்ப்போம்" என்று கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+