"12 இடங்களில் ஆர்டிஎக்ஸ் பாம் வெடிக்கும்".. கோவை கலெக்டர் ஆபிஸுக்கு 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வருகிறது. இந்நிலையில், இன்று மீண்டும் 3 ஆவது முறையாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து , வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையிட்டனர். இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையின் முடிவில் புரளி என்பது தெரியவந்துள்ளது.
கோவையின் மையப் பகுதியில் அமைந்துள்ளது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம். இங்கு தினந்தோறும் உதவித் தொகை உள்ளிட்ட நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க, குறைகேட்பு முகாமில் பங்கேற்க, மனு அளிக்க என ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பழையது, புதியது என்று 2 கட்டடங்கள் உள்ளன.

ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புதிய கட்டடத்தில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோரின் அறைகளும், குடிமைப் பொருள் வழங்கல் துறை, கனிம வளத் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன. பழைய கட்டடத்தில் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம், சமூக நலத் துறை, நிலவரித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் பள்ளிகள், தனியார் அலுவலகம் என இந்த ஆண்டு மட்டும் 30க்கும் மேற்பட்ட இமெயில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
ஆனாலும், இந்த மிரட்டல் தொடர்பாக இதுவரை எந்தவொரு நபரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக மீண்டும் இமெயில் மிரட்டல்கள் பல்வேறு துறையினருக்கு வரத் தொடங்கியுள்ளது. கடந்த 10 நாட்களில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்கு 2 முறை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகதிற்கு ஒரு முறை என 3 முறை இமெயில் மூலமாக வெடிகுண்டு விரட்டல் வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் அது புரளி என்பது தெரியவந்தது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மூன்றாவது முறையாக இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணி அளவில் குண்டு வெடிக்கும் எனவும், 12 இடங்களில் குண்டு வைக்கப்பட்டுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் இதுகுறித்து கோவை மாநகர காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மோப்ப நாயுடன் வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து பகுதிகளிலும் சோதயில்னை ஈடுபட்டனர்.
ஆட்சியேர் அலுவலகத்தில் கார் மற்றும் இரு சக்கர வாகன நிற்கும் இடம், அலுவலக வளாகம் உட்பட அனைத்து இடங்களிலும் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் சோதனையானது நடத்தப்பட்டது. இந்த சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படாத நிலையில், இன்று வந்த இமெயிலும் புரளி என்பது தெரியவந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications