பைக்கில் வந்து.. காத்திருந்து மாமூல் வாங்கிய போலீஸ்காரர்.. இடமாற்றம் செய்தார் கமிஷனர்
கோவையில் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் வீடியோ வைரலாகிறது.
Recommended Video

கோவை: காக்கி சட்டை யூனிபார்முடன் பைக்கில் வந்து, வெயிட் பண்ணி கடைக்காரரிடம் மாமூல் வாங்கிட்டு போறார் ஒரு போலீஸ்காரர்!!!
சாலையோர கடையில் லஞ்சம் வாங்கும் காவலர்; கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம். சாலையோர கடையில் ரோந்து இரு சக்கர வாகனத்தில் சென்று, சீருடையில் காவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரலானது அடுத்து, அந்த காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.
கோவையில் பட்டப்பகலில் ஒரு மெயின் ரோட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சைரன் ரோந்து பைக்கில் ஒரு போலீஸ்காரர் வருகிறார்.

பாக்கெட்டில் பணம்
அப்போது வீட்டில் வளர்க்கும் மீன் விற்கும் கடையில் பைக்கை நிறுத்துகிறார். உடனே ஒருவர் கடையிலிருந்து வெளியே வந்து போலீஸ்காரரிடம் என்னமோ பேசுகிறார். அந்த கடைக்காரரும், தனது பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து எண்ணி அதை சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு மறைவாக போலீசிடம் கொடுக்கிறார்.

பட்டப்பகலில் நடக்கிறது
பணத்தை அந்த நபர் பாக்கெட்டிலிருந்து எடுத்து தரும்வரை போலீஸ்காரர் வேறு யாரிடமோ பேசிக் கொண்டிருக்கிறார். பேசிக் கொண்டே, அந்த பணத்தை அவர் கை நீட்டி படக்கென்று வாங்கி தன் கைக்குள் மூடி மறைத்து கொள்கிறார். இது எல்லாமே பட்டப்பகலில் நடக்கிறது. ரோட்டில் ஆட்கள், வண்டிகள் போய்கொண்டே இருக்கின்றன.

வீடியோ வைரல்
இதை அங்கிருந்த ஒருவர் கவனித்துவிட்டு, தனது செல்போனில் வீடியோ எடுத்து கொண்டு இணையத்திலும் பதிவிட்டு விட்டார். பிறகென்ன??? சாலையோரம் கடை வைத்திருப்பவர்களிடம் போலீஸ்காரர் மாமூல் வாங்கியது வைரலாகி விட்டது. இதையடுத்து கோவை மாநகர காவல்துறையினர் இது சம்பந்தமாக விசாரணையை மேற்கொண்டனர்.

இன்ஸ்பெக்டர்
அதில், லஞ்சம் வாங்கியவர் கோவை பந்தைய சாலை போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் ஒழுங்கு பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவராம். பெயர் விஜய் ஆனந்த் என்பது தெரியவந்தது. இதையடுத்து மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு விஜய் ஆனந்த்தை மாற்றி கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications