கோவையில் கட்டிட அனுமதி விண்ணப்பங்கள்.. மாநகராட்சியில் என்ன நடக்கிறது? மக்கள் வைத்த கோரிக்கை
கோவை: கோவை மாநகராட்சியில் உரிய ஆவணங்கள் இல்லாதது, வரைபடம் விதிகளின்படி இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், தாமதிக்காமல் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை விரைந்து வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நகராக வளர்ந்து வருகிறது கோவை. கோவை மாநகராட்சி மற்றும் கோவை புறநகர் பகுதிகளில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் அமைந்திருப்பதால் மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 100 வார்டுகள் இருக்கின்றன. இதை பெரிதுபடுத்தினால் அதன் எண்ணிக்கை 150 வார்டுகள் வரை அதிகரிக்கும். அந்த அளவிற்கு கோவை மாநகரம் வளர்ந்துள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 100 வார்டுகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்ற. மேலும் பல்வேற தொழில் நிறுவனங்கள், ஏராளமான கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் கோவை மாநகராட்சி பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டுவதற்கும், ஏற்கனவே உள்ள பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுதவற்கும், தற்போது உள்ள கட்டிடத்தின் மீது புதிய கட்டிடம் கட்டுவதற்கும் மாநகராட்சியிடம் கண்டிப்க அனுமதி பெற வேண்டும். கோவை மாநகராட்சி அனுமதி அளித்தால் மட்டுமே கட்டிடம் கட்ட முடியும்.
இந்நிலையில் தமிழக அரசு வகுத்துள்ள விதிமுறைகளின் படி கட்டிடத்திற்கான வரைபடத்தை தயார் செய்து மாநகராட்சியிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை மாநகராட்சி அதிகாரிகள் பரிசீலனை செய்து கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி எண் வழங்கி வருகிறார்கள். கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி எண்ணை கோவை மாநகராட்சி அதிகாரிகள் தந்தன்பின்னரே கட்டிடங்களை சம்பந்தபட்டவர்கள் கட்ட முடியும். மேலும் அந்த கட்டுமான இடம் காலியிடமாக இருந்தால் அதற்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு காலியிட வரியையும் மாநகராட்சியில் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் தான் அனுமதி எண் கிடைக்கும்.
தற்போதைய நிலையில், கோவை மாநகராட்சியில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு 10 ஆயிரம் சதுரஅடி வரையிலும், வணிகக் கட்டிடங்களுக்கு 2 ஆயிரம் சதுரஅடி வரையிலும் அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு மேற்பட்ட சதுரஅடியில் கட்டிடங்கள் கட்ட திட்டமிட்டால்.. உள்ளூர் திட்ட குழுமத்திடம் தனியாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டியது அவசியம் ஆகும்.
கோவை மாநகராட்சியில் 2 ஆயிரம் சதுர அடி வரையிலான குடியிருப்பு கட்டிடங்களுக்கு 5 மண்டல உதவி ஆணையர்கள் அனுமதி வழங்கி வருகிறார்கள்வருகிறது. துணை ஆணையர்களை பொறுத்தவரை 3 ஆயிரம் சதுரஅடி வரையிலும் 3 ஆயிரம் சதுரஅடி முதல் 10 ஆயிரம் சதுர அடி வரை கோவை மாநகராட்சி ஆணையாளர் அனுமதி வழங்குவார். அதேநேரம் வணிக கட்டிடம் என்றால் மாநகராட்சி ஆணையர் மட்டுமே அனுமதி வழங்க முடியும்.
கோவை மாநகராட்சியில் ஒவ்வொரு மாதம் கட்டிடம் கட்ட அனுமதி கோரி 500 முதல் 600 பேர் வரை விண்ணப்பம் வருவதாகவும். கடந்த 2023-ம் ஆண்டு மட்டும் கோவை மாநகரில் குடியிருப்பு மற்றும் வணிக ரீதியிலான கட்டிடம் கட்ட கோரி 8 ஆயிரம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு உள்ளன. இதில் 6 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு மாநகராட்சியால் அனுமதி அளிக்கப்பட்டு அனுமதி எண் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரம் ஆவணங்கள் இல்லாதது, வரைபடம் விதிகளின்படி இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் மீது முடிவு எடுக்காமல் காலதாமதம் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கோவையை பொறுத்தவரை கட்டிட வரைபட அனுமதி எண் கேட்டு உரிய வரைபடங்கள், ஆவணங்களுடன் விண்ணப்பித்தால், 30 நாட்களுக்குள் அனுமதி எண் வழங்க வேண்டும்.
ஆனால், பல்வேறு காரணங்களை கூறி அனுமதி எண் வழங்கப்படுவது தாமதம் ஆகிறது. எனவே கட்டிடம் கட்டுபவர்கள் பாதிக்கப்படாத வகையில், கட்டிட அனுமதி எண் வழங்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே மாநகராட்சி அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.
-
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications