Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்னு ஏறுது பாஜக கிராப்.. கோவை கோயிலில் "கால்" வைத்த அண்ணாமலை.. திடீர்னு 2 பேர்.. "ஜெர்க்" ஆன தலைவர்

Subscribe to Oneindia Tamil

கோவை: மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது கோவை மக்களவை தொகுதி.. இன்றைய தினம், பாஜக + திமுக வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளார்கள்.

இந்த முறை தேர்தலில், திமுகவின் வாக்கு வங்கியை உடைக்க வேண்டும், அதில் குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதத்தையாவது, தங்கள் பக்கம் திருப்பிவிட வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கி உள்ளது தமிழக பாஜக. இதன்காரணமாகவே, கிட்டத்தட்ட ஒரு மெகா கூட்டணியையே அமைத்து களம் கண்டுவருகிறது.

Can Tamil Nadu BJP Leader win in Coimbatore constituency and What happened to Newly married couple in Kovai Temple

அதேபோல, எங்கு பிரச்சாரம் செய்தாலும், அதிமுகவைவிட திமுகவையே பெரிதும் டேமேஜ் செய்து வருகிறது. அதற்கேற்றவாறு, முக்கிய தொகுதிகளில் பாஜகவுடன் திமுக நேருக்கு நேர் மோதுவதும், மிகுந்த எதிர்பார்ப்பை உண்டுபண்ணி வருகிறது. இதில், முக்கியமானது கோவை தொகுதியாகும்.

கோவை பிரச்சாரம்: மாநில தலைவர் அண்ணாமலை, கோவையில் போட்டியிடுவதாலேயே இந்த தொகுதி தேசிய அளவிலும் கவனத்தை பெற துவங்கிவிட்டது. தமிழகத்தில் பல தொகுதிகளில் மும்முனை போட்டி நிலவுகிறது என்றாலும், கோவையில் நிலவும் போட்டி, தமிழக அரசியல் கட்சிகளுக்கே ஒரு சவாலாகவும் அமைந்து வருகிறது.

அண்ணாமலை வருகையால் ஏற்பட்ட கடுமையான போட்டி காரணமாக, மற்ற தொகுதிகளை விட இந்த தொகுதியில் பணமழைக்கும், பரிசு பொருட்களுக்கும் நிறைய வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

அண்ணாமலை: இதைத்தான் இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டார். "கோவை தொகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்வார்கள். ஆனால் நான் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட தரமாட்டேன். பாஜக எதுவும் செலவு செய்யாது.. தமிழக வரலாற்றில் செலவு குறைந்த தேர்தலாக இந்த தொகுதி தேர்தல் இருக்கும். ஆனால், தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையில் இருந்துதான் தொடங்க போகிறது" என்று அண்ணாமலை கூறியிருந்ததை திமுகவும் கவனிக்காமல் இல்லை.

இந்நிலையில், இன்றைய தினம் அனைத்து கட்சியினருமே, வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளாகும்.. அந்தவகையில், கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதுபோலவே, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரும் வேட்பு மனு தாக்கல் செய்தார்..

சாமி தரிசனம்: ஆனால், தன்னுடைய வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக, கோவை கோனியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் அண்ணாமலை.. அவருடன் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டவர்களுடன் கோயிலுக்கு வந்திருந்தனர்.. கோனியம்மன் கோயிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு, அங்கிருந்து ஊர்வலமாக கோவை கலெக்டர் ஆபீசுக்கு சென்றார் அண்ணாமலை.

முன்னதாக, கோவைப்புதூரைச் சேர்ந்த ரவி மற்றும் தேவிகா என்ற இந்த ஜோடிக்குதான் இன்று திருமணம் நடந்துள்ளது. இதனால், தாலி கட்டி முடித்த கையோடு சாமி தரிசனம் செய்ய, கோனியம்மன் கோயிலுக்கு வந்திருந்தனர்.

வாழ்த்துக்கள்: அப்போதுதான், அண்ணாமலையும் சாமி கும்பிடுவதற்காக கோயிலுக்குள் நுழைந்தார். திடீரென அண்ணாமலையை கோயிலில் பார்த்ததுமே, புதுமண தம்பதி 2 பேருமே, ஓடிவந்து அண்ணாமலையின் காலில் விழுந்து வணங்கினார்கள்..

இதை அண்ணாமலையும் எதிர்பார்க்கவேயில்லை.. ஒருகணம் தடுமாறிய அண்ணாமலை, பிறகு மணமக்களை மனதார வாழ்த்தி ஆசி வழங்கினார்.. இந்த சம்பவத்தினால் கோயிலுக்குள் திடீர் பரபரப்பு ஏற்பட்டு அடங்கியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+