அதிர்ந்த கோவை.. My V3 Ads நிறுவனத்திற்கு ஆதரவாக திரண்ட மக்கள்.. MD வெளியிட்ட ஆடியோவில் பேசியது என்ன?
கோவை: My V3 Ads என்ற நிறுவனத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் கோவையில் திரண்ட நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவன எம்.டியும் அங்கு வந்தார். எம்.டி பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
யூடியூபில் விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும் என ஏமாற்றி லட்சக்கணக்கானோரிடம் நூதன MLM மோசடி நடைபெறுவதாக கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், My V3 Ads நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் கோவையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை நீலாம்பூர் எல்&டி பைபாஸ் பகுதியில் சுமார் 5 ஆயிரம் மக்கள் திரண்டுள்ளனர். வெளியூர்களில் இருந்தும் பேருந்துகளில் வந்து மக்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு வருவாய் வழங்கும் ஆன்லைன் செயலிக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறி ஆயிரக் கணக்கானோர் ஒன்று கூடியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட My V3 Ads நிறுவன எம்.டி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள அவர், "நான் முதலில் காவல்துறையினருக்கு, ஒரு முக்கிய கோரிக்கையை வைக்கிறேன். இன்று கோவையில் மக்கள் திரண்டுள்ளதற்கு எங்கள் நிறுவனம் எந்த வகையிலும் காரணம் அல்ல. எங்கள் நிறுவனத்தின் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கு காரணமாக, மக்கள் தன்னெழுச்சியாக திரண்டுள்ளனர்.
மக்கள் அனைவரும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரள திட்டமிட்டார்கள். இவ்வளவு கூட்டம் கூட வாய்ப்புள்ளது என்பதால் தான் நான், கலெக்டர் ஆபீஸில் அனைவரும் திரண்டால் கோயம்புத்தூரே ஸ்தம்பித்து விடும். அனைத்து அலுவலகங்களுக்கும் பிரச்சனை வரும். அதிகார வர்க்கமும் பெரிய சிரமத்திற்கு உள்ளாக நேரிடும் என்பதால் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளோம்.
நான் இந்த தகவலை கோவை கமிஷனர் ஆபீஸுக்கு சொல்லியும், பதில் இல்லை. அதைத்தொடர்ந்து, யாருக்கும் தொந்தரவு இல்லாத வகையில், எல் & டி பைபாஸ் பகுதிக்கு வருமாறு எங்கள் My V3 மக்களுக்கு கூறினேன். இந்த கூட்டம் கலெக்டர் ஆபீஸுக்கு போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் என நினைத்துப் பாருங்கள். உண்மையில், சமூக அக்கறையோடு, மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இந்தப் பகுதியில் திரண்டுள்ளனர்.
அதிகார வர்க்கத்திற்கு, மக்கள் தங்கள் வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அவர்களுக்கு ஒரு இடத்தை காட்ட வேண்டும் என்பதற்காக எல்.என்.டி பைபாஸ் பகுதியை சொன்னேன். மற்றபடி, எந்த விஷயத்தையும் நாங்கள் முன்னின்று நடத்தவில்லை. இன்னும் சொல்லப் போனால் எனது செல்போனை நேற்று முதல் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டேன். நிறுவனம் மீது போலி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு எதிராக போராட்டம் நடத்த எங்கு வர வேண்டும் என என்னை கேட்பார்கள் என்பதற்காகவே அப்படி செய்தேன். எங்களது டைரக்டர்களின் போன்களையும் ஸ்ட்விச் ஆஃப் செய்யச் சொல்லிவிட்டேன்.
அந்தளவுக்கு சென்சிட்டிவான சூழலை சமயோசிதமாக கையாண்டுள்ளோம். எல்.என்.டி பைபாஸ் பகுதியில் மக்கள் திரண்ட பிறகு, அங்கு உள்ளூர் காவல் நிலையத்தில் தகவல் கூறுமாறு தெரிவித்தேன். அப்படி சொல்ல வந்தவர்களை குறி வைத்து தொல்லை கொடுப்பது சரியல்ல. உள்ளே வரும் மக்களை தடுப்பதாக தகவல் வருகிறது. மக்கள் கூடி, மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்து விட்டு கலைந்து போய்விடுவார்கள். அப்படி இருக்கும்போது அவர்களை கூட விடாமல் தடுக்க நினைப்பது தவறு. மக்களை கூடவே விடாமல் செய்யும்போது, அவர்கள் என்ன செய்வார்கள் என்பது தெரியாது." எனப் பேசியுள்ளார்.
மேலும், மக்கள் திரண்டுள்ள எல்&டி பைபாஸ் பகுதிக்கு My V3 Ads நிறுவன எம்.டியும் வருகை தந்தார். அரசியல் அழுத்தத்தால் தங்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் மக்கள் தன்னெழுச்சியாக வந்துள்ளதாகவும், அவர்களோடு பங்கேற்க தானும் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications