பெங்களூர் டூ கோவை ஆம்னி பஸ்ஸில்.. இப்படி எல்லாமா.. டீ குடிக்க போன கேப்பில் சம்பவம்
கோவை: பெங்களூரில் இருந்து கோவை வந்த ஆம்னி பேருந்தில் நடந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் குறிப்பிட்ட ஆம்னி பேருந்து பெங்களூரில் இருந்து கோவை நோக்கி வந்துள்ளது. பேருந்தை டிரைவர் தேநீர் குடிப்பதற்காக நடுஇரவில் நிறுத்தியுள்ளார். அப்போது பேருந்தில் திடீரென ஏறிய நபர் லேப்டாப் திருடியுள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
ரயிலில் டிக்கெட் கிடைக்காத பலர் ஆம்னி பேருந்துகளில் தான் இப்போது பயணிக்கிறார்கள். இரவில் தூங்கினால் காலையில் எழுந்து பார்க்கும் போது சொந்த ஊர் வந்துவிடுகிறது. இதேபோல் சொந்த ஊரில் இருந்து வேலைக்காக சென்னைக்கோ, பெங்களூருக்கோ அல்லது கோவைக்கோ புறப்பட்டால் விடியும் காலை அந்த நகரத்தில் இருக்கும். எந்த அலுப்பும் இல்லாமல் குடும்பத்துடன் சொகுசு வசதியுடன் பேருந்துகளில் பயணிக்க முடிவதால், ஆம்னி பேருந்துகள் தான் குடும்பமாக செல்வோருக்கு விருப்பமான ஒன்றாக உள்ளது.

அதேபோல் ரயில்களில் எந்த ரயிலில் யார் ஏறுவார்கள், யார் இறங்குவார்கள் என்பது தெரியாது என்பதுடன், திருடி செல்வார்களோ என்ற பயமும் பயணிகளுக்கு சில நேரங்களில் ஏற்படும். சாதாரண படுக்கை வசதி ரயில்களில் செல்வோர் உடைமைகளை யாரும் திருடிவிடுவார்களோ என்ற பயத்துடனே பயணிப்பார்கள்.
ஆனால் ஆம்னி பேருந்துகளில் அப்படி இல்லை.. திடீரென யாரும் வந்து ஏறி உடைமைகளை திருடிவிட முடியாது. ஏனெனில பேருந்துகளில் நடத்துனர் மற்றும் டிரைவரை மீறி ஏற முடியாது. அப்படியே ஏறினாலும் சிசிடிவி கேமராக்கள் இருக்கும் என்பதால் தப்பவே முடியாது. இதனால் ஆம்னி பேருந்துகளில் பொதுவாக திருட்டு சம்பவங்கள் அபூர்வமாகவே நடைபெறும். இந்த சூழலில் பெங்களூரில் இருந்து கோவை வந்த ஆம்னி பேருந்தில் நடந்த சம்பவம், ஆம்னி பேருந்து பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்படியும் கூட நடக்குமா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
குறிப்பிட்ட ஆம்னி பேருந்து பெங்களூரில் இருந்து கோவை நோக்கி வந்துள்ளது. பேருந்தை டிரைவர் தேநீர் குடிப்பதற்காக நடுஇரவில் நிறுத்தியுள்ளார். அப்போது பயணிகள் பலர் இறங்கிவிட்டனர். அங்கு பேருந்தில் திடீரென ஏறிய நபர் லேப்டாப் திருடியுள்ளார். இது பின்னர் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது தெரியவந்தது. இந்த வீடியோவை பார்த்த பயணிகள் ஆம்னி பேருந்தில் பயணிக்கும் போதும் உஷாராக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications