Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் வழக்கை நடத்தும் வக்கீலுக்கு பணம் கொடுக்க.. திருடன் செய்த வேலை.. ஆடிப்போன ஊட்டி வக்கீல்

Subscribe to Oneindia Tamil

கோவை: நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் ஹரிகரன் என்பவர் வக்கீலாக இருக்கிறார். இவர் கடந்த 5ம் தேதி கோவைக்கு வந்தார். பேருந்தில் பயணித்த போது, அவரது செல்போன் திருடப்பட்டது. இந்த வழக்கில் கோவை புலியங்குளத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், வழக்கை நடத்தும் வக்கீலுக்கு பணம் மற்றொரு வக்கீலின் செல்போனை திருடியது தெரியவந்துள்ளது.

பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள திருடன், தனது வக்கீலுக்கு வழக்கை நடத்த பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். பணத்தை புரட்ட வழக்கம் போல் திருட நினைத்த திருடன், அதற்காக இன்னொரு வக்கீலுக்கு ஸ்கெட்ச் போட்டுள்ளார். அப்படி திருடியவர் கடைசியில் அதற்கும் சேர்த்து கம்பி எண்ணி வருகிறார். யார் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

coimbatore lawyer cell phone

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த 75 வயதாகும் ஹரிகரன் என்ற வக்கீல் இவர் கடந்த ஜனவரி 5-ந் தேதி கோவைக்கு பேருந்தில் வந்துள்ளார். வக்கீல் ஹரிகரன் பேருந்தில் சென்ற போது அவரின் விலை உயர்ந்த செல்போன் திருடப்பட்டிருக்கிறது இதுகுறித்து ஹரிகரன் கடைவீதி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அதில் வக்கீலிடம் செல்போனை திருடியது கோவை புலியகுளத்தை சேர்ந்த 47 வயதாகும் மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்ததுடன், அவர் திருடிய செல்போனை மீட்டனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சில தகவல்கள் வெளியாகின. அதாவது, மணிகண்டன் தனது 15 வயதிலேயே திருட்டில் ஈடுபட்டு வந்து உள்ளார். அவர் மீது கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் ஏராளமான திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் 15 வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வருகிறது. இதற்காக அவர் ஒரு வக்கீலை நியமித்து வழக்கையும் நடத்தி வருகிறார்.

இதற்கிடையில் அண்மையில் ஒரு திருட்டு வழக்கில் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். சில மாதங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து அவர் வெளியே வந்தார். வழக்கை நடத்தி வரும் வக்கீலுக்கு கொடுக்க மணிகண்டனிடம் பணம் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே திருட்டில் ஈடுபட்டு அந்த பணத்தை கொடுக்க முடிவு செய்தார்.

அப்போதுதான் ஊட்டி வக்கீல் ஹரிகரனிடம் தெரியவந்தது. அந்த செல்போனை ஒரு கடையில் ரூ.20 ஆயிரத்துக்கு விற்க முயன்ற போதுதான் போலீசார் மணிகண்டனை பிடித்தார்கள். இதையடுத்து போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+