தினகரன் செய்தியை எப்படி போட வேண்டும் தெரியுமா? மீடியாக்களுக்கு முதல்வர் அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தினகரன் செய்தியை எப்படி போட வேண்டும் தெரியுமா?- வீடியோ

    கோவை: கெட்டவர்களுக்கும் துரோகிகளுக்கும் உயர்நீதிமன்றம் தக்க பாடம் புகட்டிவிட்டது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

    கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்றுள்ளார். அவர் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளித்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

    CM Edappadi Palanisamy says that ADMK will win in byelection

    மீனவர்கள் காக்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். புதிய அணை கட்ட தமிழக அரசு தயாராக உள்ளது. மற்ற மாநிலங்கள் புதிய அணை கட்ட ஒத்துழைக்க வேண்டும்.

    மீனவர்கள் தாக்கப்படக் கூடாது என்பது தமிழக அரசின் நிலைப்பாடு ஆகும். செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளமாக இருக்கிறது. மக்கள் வசிக்கும் இடங்களில் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தினகரன் ஒரு ஞானி. அவர் எல்லாவற்றையும் சொல்வார். அவர் அதிமுக உறுப்பினரே இல்லை. பின்னர் அவர் குறித்து எப்படி கருத்து தெரிவிக்க முடியும். நிருபர்களாகிய உங்களுக்கு பரபரப்பு செய்தி தேவைப்பட்டால் அவர் குறித்து செய்தி போட்டுக் கொள்ளுங்கள்.

    அத்திக்கடவு- அவினாசி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். அதற்காக டெண்டர் ஒப்பந்தம் விரைவில் கோரப்படும். 7 தமிழர்கள் விடுதலை குறித்து ஆளுநர்தான் முடிவு செய்ய முடியும். அதிமுக தொண்டர்கள் விதிக்கு உட்பட்டுதான் பேனர்களை வைத்திருப்பர் என்றார் முதல்வர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+