துணிச்சலா சொல்றேன்.. கோவை நூலகத்துக்கு அடிக்கல் நாட்டிய கையோடு திறப்பு விழா தேதியை கூறியை ஸ்டாலின்!
கோவை: கோவை அனுப்பர்பாளையத்தில் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்துக்கு இன்று அடிக்கல் நாட்டிப் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த நூலகம் மற்றும் அறிவியல் மையம் திறக்கப்படும் தேதியையும் இன்றே அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். பல்வேறு அரசு திட்டப் பணிகளை பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், கோவை அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு இன்று முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

ரூ.300 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பளவில் பெரியார் பெயரில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமையவுள்ளது. இதில், குழந்தைகளுக்கான நூலகம், போட்டி தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கான நூலகம், டிஜிட்டல் நூலகம் மற்றும் தமிழ், ஆங்கிலம் என தனித்தனி பிரிவுகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இது தவிர, கழிவறை, லிப்ட் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற உள்ளன. மாணவர்கள், பொதுமக்களுக்காக பல லட்ச கணக்கான புத்தகங்கள் நூலகத்தில் இடம்பெற உள்ளது.
அதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், பேசுகையில், "சென்னையில் அண்ணா நூலகம் இருக்கிறது. மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம் இருக்கிறது. கோவையில் இவர்கள் இருவரையும் உருவாக்கிய தந்தை பெரியார் பெயரில் இந்த நூலகம் அமையவுள்ளது. ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் நூலகத்தோடு சேர்த்து அறிவியல் மையத்தையும் அமைக்க உள்ளோம்.
இந்த அடிக்கல் நாட்டு விழாவிலேயே திறப்பு விழா தேதியையும் நான் அறிவிக்கிறேன். துணிச்சலோடு, தெம்போடு, உறுதியோடு அறிவிக்கிறேன். இந்த பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படும். திமுக ஆட்சியில் ஒரு திட்டத்தை அறிவித்தால் அதை குறிப்பிட்ட காலத்தில் திறந்து வைப்போம்.
இந்தியாவிலேயே முதல் வேளாண்மை பல்கலைக்கழகம் கோவையில் தொடங்கப்பட்டது. அனைத்து மக்களுக்குமான அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலை விட திமுக செல்வாக்கு அதிகரித்துள்ளது. எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயணித்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நான் நடத்தியிருக்கிறேன். இந்த கோவை மாவட்டத்திற்கு, மூன்று முறை நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருக்கிறேன். அந்த நிகழ்ச்சிகளில் மாவட்டங்களுக்கான பல்வேறு திட்டங்களைத் தொடங்கியும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தும் இருக்கிறேன்.
நேற்று காலையில் இங்கு வந்ததிலிருந்து, நடந்துக்கொண்டிருக்கும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்திருக்கிறேன். பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்திருக்கிறேன். மாவட்டம் முழுவதும் மக்களுக்குத் தேவையான கோரிக்கைகளை கேட்டிருக்கிறேன். இன்றைக்கு, அதில் ஒரு கட்டமாக, இந்த மாபெரும் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.
நேற்றுகூட, கோவையில் எல்காட் நிறுவனத்தின் சார்பில், 114 கோடியே 16 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தைத் திறந்து வைத்தேன். அதுமட்டுமல்ல, இன்று இந்த நிகழ்ச்சிக்கு முன்பு, கோவையின் அடையாளமாக மாற இருக்கும் செம்மொழிப் பூங்கா பணிகளையும் பார்வையிட்டுதான் நான் இங்கு வந்திருக்கிறேன். 133 கோடி மதிப்பீட்டில் காந்திபுரத்தில் நம்முடைய அரசு உருவாக்கி வருகின்ற அந்த பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு ஜுன் அது திறக்கப்பட இருக்கிறது. நம்முடைய ஆட்சியில் ஒரு திட்டத்தை அறிவித்தோம் என்றால், அதை குறிப்பிட்ட காலத்திற்குள் திறந்து வைப்போம்.
அதற்கு சில எடுத்துக்காட்டுகளை நான் சொல்ல விரும்புகிறேன். உயர்தர சிகிச்சை வழங்கும் சென்னை கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை. உலகத்தரத்திலான மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம். வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு, மாபெரும் அரங்கம். உலகத்திற்கு நம்முடைய வரலாற்றை எடுத்துக்காட்டும் கீழடி அருங்காட்சியகம்! அந்த வரிசையில்தான், இந்த பெரியார் நூலகமும் இடம்பெற போகிறது.
கோவையில் விளை நிலங்களில் யானைகள் புகாத வண்ணம் நவீன வேலிகள் அமைக்கப்படும். ரூ.1848 கோடி மதிப்பீட்டில் கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும், 17 ஏக்கரில் கோவையில் ஐடி பார்க் திறக்கப்படும், கோவையில் பிரமாண்ட கிரிக்கெட் மைதானம் விரைவில் அமைக்கப்படும்." என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications