கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவை மட்டுமல்ல எந்த ஊர்களும் எங்கள் ஊர்தான்.. பாரபட்சமே இல்லை- முதல்வர் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

கோவை: கோவை மட்டுமல்ல எந்த ஊர்களும் எங்கள் ஊர்தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    எந்த முதல்வரும் செய்யத்துணியாத காரியமிது- Udhayanidhi Stalin புகழாரம் | Oneindia Tamil

    தளர்வுகளற்ற ஊரடங்கால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. நேற்றைய தினம் கோவையில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

    இதையடுத்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நீலகிரி ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்.

    பெரும் வரவேற்பு.. கோவையில் முதல்வர் ஸ்டாலின் விசிட்.. உலக அளவில் டிரெண்ட் ஆன #WeStandWithStalin! பெரும் வரவேற்பு.. கோவையில் முதல்வர் ஸ்டாலின் விசிட்.. உலக அளவில் டிரெண்ட் ஆன #WeStandWithStalin!

    கேரளா

    கேரளா

    கர்நாடகா மற்றும் கேரளா மாதிரியான அண்டை மாநிலங்களில் இருந்து மக்கள் வருவதும், வடமாநில தொழிலாளர்கள் அதிகம் இங்கு தங்கி பணிபுரிவதும், தொழிற்கூடங்கள் அதிகம் உள்ளதுமே கோவை பகுதியில் தொற்று பரவ காரணமாக உள்ளது.

    அனைத்து ஊர்களும்

    அனைத்து ஊர்களும்

    கோவை மட்டுமல்ல அனைத்து ஊர்களும் எங்கள் ஊர்தான். தமிழகத்தில் ஆக்ஸிஜன், படுக்கை வசதி பற்றாக்குறை இல்லை. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான் அதிக அளவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

    கொரோனா

    கொரோனா

    அரசும், மக்களும் சேர்ந்தால் கொரோனா மட்டுமல்ல எந்த நோயையும் நாம் வெல்லலாம். கொரோனா தடுப்பு பணியில் பாரபட்சம் பார்க்கவில்லை என முதல்வர் தெரிவித்துள்ளார். கோவை, ஈரோடு பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த நிலையில் முதல்வர் இதனை தெரிவித்துள்ளார்.

    செவிலியர்கள்

    செவிலியர்கள்

    மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்பு கவச உடை அணிந்து கொண்டு கோவை ஈ. எஸ். ஐ மருத்துவமனையில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை வார்டுக்குள் சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

    English summary
    CM MK Stalin says that Not only Coimbatore, all the places are our places.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X