பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் 100 பெண்கள் எல்லாம் பாதிக்கப்படவில்லை.. ஆட்சியர்
Recommended Video

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் 100 பெண்கள் எல்லாம் பாதிக்கப்படவில்லை என ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
பல்வேறு பெண்களின் கற்பை சூறையாடியதாக பொள்ளாச்சியை சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 4 பேருக்கும் பின்புலத்தில் அரசியல் வாரிசுகள் இருப்பதால்தான் போலீஸார் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

ராசாமணி
இந்த நிலையில் இந்த விவகாரத்தை திசை திருப்ப பார்க்கிறார்கள் என பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் கோவை ஆட்சியர் ராசாமணியை சந்தித்து மனு அளித்தார்.

இல்லை 100 பெண்கள்
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராசாமணி கூறுகையில் பொள்ளாச்சி வழக்கில் 100 பெண்கள் பாதிக்கப்படவில்லை என தகவல் கிடைத்துள்ளது. எனவே 100 பேர் என கூற வேண்டாம்.

நடவடிக்கை
கைதான 4 பேர் தவிர்த்து வேறு யாருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்புள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் அவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுமதி
அதுபோல் வழக்கை திசைதிருப்பினாலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தொல்லை தந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த விதிகளக்குள்பட்டே அனுமதி அளிக்கப்படும். காவல்துறை விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றார் ராசாமணி.












Click it and Unblock the Notifications