கோவை அதிமுக பிரமுகர் மனைவி கொலையில் ட்விஸ்ட்.. விவாகரத்து கொடுக்காததால் கணவர் வெறிச்செயல்
கோவை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். கொலை, கொள்ளை, போதை, பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. கோவையில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் என்பவரின் மனைவி கடந்த மாதம் வீட்டில் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் அவர்களிடம் பணியாற்றிய ஓட்டுநர் சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அதில் திடீர் திருப்பமாக விவாகரத்து கொடுக்காததால் ஓட்டுநர் மூலம் மனைவியை கொலை செய்த வழக்கில் அதிமுக சரவணன் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், பன்னீர்மடை பகுதி அதிமுக பிரமுகராக இருப்பவர் கவி சரவணன் (வயது 51). இவர் பன்னீர்மடை ஊராட்சி முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் மாவட்ட கவுன்சிலராக பதவி வகித்தார். இவருக்கு மகேஸ்வரி (வயது 46) பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். தாளியூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 49) கடந்த 15 வருடங்களாக ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

பெண் கொலை
கடந்த அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த மகேஷ்வரியை சுரேஷ் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு வடவள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், சரவணனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் மனைவி மகேஸ்வரியுடன் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் சரவணன் - மகேஸ்வரி கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் சுரேஷ், கணவன் - மனைவி இருவருக்கும் ஓட்டுநராக இருந்து வந்துள்ளார். அப்போது மகேஸ்வரி, நீ பணம் வாங்கிக் அவருக்கு சப்போர்ட் பண்ற. நீ நல்லாவே இருக்க மாட்ட. நாசமா போய்டுவ என்று திட்டியதால் ஆத்திரமடைந்து மகேஸ்வரியை கொலை செய்ததாக சுரேஷ் வாக்குமூலம் அளித்தார்.
விவாகரத்து பஞ்சாயத்து
காவல்துறையினர் தொடர்ந்து சுரேஷை கஸ்ட்டியில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் திடீர் திருப்பமாக சுரேஷை வைத்து மனைவியை கொலை செய்ய தூண்டியதே சரவணன் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "அதிமுக பிரமுகர் கவி சரவணனுக்கும், அவரின் மனைவி மகேஸ்வரிக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து பிரச்சனைகள் நிலவி வந்தன.
சரவணனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால், வீட்டிற்கு வராமல் வேறு பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார். அங்கு ஏற்கனவே திருமணமான மற்றொரு பெண்ணுடன் அவர் உறவில் இருந்துள்ளார். இதுதொடர்பாக மகேஸ்வரியுடன் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மகேஸ்வரியிடம் அவர் விவாகரத்து கேட்டு வந்துள்ளார். ஆனால் மகேஸ்வரி விவாகரத்து கொடுக்க முன் வரவில்லை.
அதிமுக பிரமுகர் கைது
இதனால் சரவணன் அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக சுரேஷிடம் பேசி வழக்கு செலவை பார்த்துக் கொள்கிறேன். மேலும் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் உள்ள செங்கல் சூளையை உனக்கு தருகிறேன். எப்படியாவது என் மனைவியை கொலை செய்துவிடு என்று சரவணன் கூறியுள்ளார். அதனடிப்படையில் தான் சுரேஷ் மகேஸ்வரியை கொலை செய்துவிட்டு நாடகமாடியுள்ளார்.
சரவணனிடம் நடத்திய விசாரணையில் இதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து சுரேஷை தொடர்ந்து சரவணனையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்." என்றனர். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications