கோவை விமான நிலைய ஓடுபாதை நீளம் 12,500 அடியாக அதிகரிக்கிறது.. மாஸ்டர் பிளான்.. சூப்பர் வசதிகள்
கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. இங்கு விமான நிலையத்தை விரிவுபடுத்தவும், ஓடுபாதையை நீளப்படுத்தவும் ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து முடிந்துள்ளது. தற்போது கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கான மாஸ்டர் பிளான் தயாராகி உள்ளது. ஓடுபாதையை 12,500 அடி நீளத்துக்கு அதிகரிக்க இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தமிழநாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையம் விரைவில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ஏனெனில் தற்போதைய நிலையில் பெரிய விமானங்கள் மற்றும் பன்னாட்டு விமானங்கள் அதிக அளவில் வந்து செல்ல முடியாத அளவிற்கு ஓடுபாதையின் நீளம் சிறியதாக உள்ளது. இதனால் கோவை வரும் பலர், சென்னை அல்லது கொச்சி வந்து, அதன்பின்னர் கோவை வரும் நிலை இருக்கிறது.

தற்போதைய நிலையில் கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், ஷீரடி உள்ளிட்ட நகரங்களுக்கும், அபுதாபி, சிங்கப்பூர், ஷார்ஜா ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் உள்நாட்டிற்குள் 29 விமானங்களும், வெளிநாடுகளுக்கு 4 விமானங்களும் இயக்கப்படுகிறது.
கோவை விமான நிலையத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக பயணிகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி கோவை விமான நிலையத்தை விரிவுபடுத்தவும், ஓடுபாதையை நீளப்படுத்தவும் ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்துவிட்டது. தற்போது விமான நிலைய விரிவாக்கத்துக்கான திட்டங்களை செயல்படுத்த விமான நிலைய ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதியில் ரூ.29 கோடியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து விமான நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் கூறும் போது, கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான தற்காலிக மாஸ்டர் பிளான் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் முதற்கட்டமாக ஒன்றரை ஆண்டுகளில் விமான நிலையத்திற்கான சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

பயணிகள் முனையம், சரக்கு முனையம், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம், தொழில்நுட்ப கட்டிடம் ஆகியவை 2 கட்டங்களாக நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. ஓடுபாதையின் நீளம் 2,900 மீட்டரில் இருந்து 3,810 மீட்டராக (12,500 அடியாக) அதிகரிக்கப்படுகிறது. மேலும் கோவை விமான நிலையத்தில் புறப்படும் விமானங்களின் எண்ணிக்கையும் இதன் மூலம் அதிகரிக்கும்.
மேலும் கோவை விமான நிலையத்தில் சிறப்பு பஸ் நிலையம், மல்டிலெவல் கார் பார்க்கிங், அணுகுசாலை, ஓட்டல்கள் போன்ற கூடுதல் வசதிகளும் ஏற்படுத்தப்பட இருக்கிறது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு பின்னர் பல லட்சம் பயணிகள் எளிதாக பயணிக்க முடியும். மேலும் தினசரி இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையும் 33-ல் இருந்து 60 ஆக அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
-
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications