பொசுக்கப்பட்ட 3 பேர்.. கோவை ஏர்போர்ட் சம்பவம்... பாதுகாப்பு குறைபாடு காரணமா? மனித காமக் கொடூரமா?
கோவை: கோவையில் ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மதுரையை சேர்ந்த கல்லுாரி மாணவியை, கத்தி முனையில் கடத்தி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை கோவை போலீசார் சுட்டுப்பிடித்தனர். நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிக்கப்பட்ட இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் கூட்டு பாலியல் சம்பவ கொடுமைகள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன், " கோவை ஏர்போர்ட் பின்புறம் இந்த சம்பவம் நடந்துள்ளது.. ஒரு பிரத்யேக ஆப் மூலமாகவும், பல ஆண்களும், பெண்களும் இந்த பகுதிக்கு வந்து செல்வதாக கூறுகிறார்கள்.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை..

கோவை ஏர்போர்ட்
நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு காரில் ஆண் நண்பருடன் இளம்பெண் பேசி கொண்டிருந்தபோதுதான் 3 பேர் பைக்கில் அங்கு வந்துள்ளனர்.. ஆண் நண்பரை கத்தியால் வெட்டி, பாட்டிலால் தாக்கி, மாணவியையும் தாக்கியிருக்கிறார்கள்.. பாலியல் வல்லுறவு செய்துள்ளனர்.. ஆண் நண்பர்தான் போலீசுக்கு தகவல் சொல்லி உள்ளார்.. தற்போது மாணவிக்கு சிகிச்சை நடந்து வருகிறது.
என்சிஆர்பி தகவலின்படி, கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் என்பது தமிழகத்தில் குறைவுதான்.. பொள்ளாச்சி சம்பவமும் கூட்டு பாலியல்தான்.. ஆனால், தமிழகத்தில் குறைந்த சதவீதத்தில் இருந்த கூட்டு பாலியல் வன்கொடுமைகள் தற்போது அதிகமாகி கொண்டிருப்பதாக தெரிகிறது.
அண்ணா யுனிவர்சிட்டி
அண்ணா யுனிவர்சிட்டி சம்பவமும் சரி, இந்த கோவை சம்பவமும் சரி கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான்.. ஆண் நண்பருடன் இரவு பேசிக் கொண்டிருந்தபோதுதான் அந்த கொடுமை நடந்தது.. இரவு 11 மணிக்கு அப்படியென்ன பேச வேண்டியிருக்கு? என்ற கேள்வியும் எழுகிறது. சமூகத்தின் பாதுகாப்பற்ற நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.. இரவு 11 மணிக்கு போனில்கூட ஆண் நண்பரிடம் பேசிக் கொள்ளலாம்.
இப்படி பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும், மாணவியை சீரழித்தவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை.. காவல்துறையும், நீதிமன்றமும் எந்த எல்லைக்கும் சென்று, இந்த கயவர்களை தண்டிக்க வேண்டும்.
ஏர்போர்ட் பின்புறம்
பாதுகாப்பு குறைபாடு உள்ள இடங்களே இதுபோன்ற கொடுமைகளுக்கு காரணமாகின்றன.. மதுரை ஏர்போர்ட் பின்பக்கம் காட்டுப்பகுதியாக உள்ளது. எல்லா ஏர்போர்ட் பின்னாடியும் இப்படி காடுகள்தான் உள்ளன.. காரணம், ஏர்போர்ட்டுகளை சுற்றி பெரிய கட்டிடங்களை யாரும் கட்ட மாட்டார்கள்.. எனவே அந்த பகுதிகள் புழக்கத்தில் இல்லாமல் போய்விடுகிறது..
எந்தஅளவுக்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியை நோக்கி செல்கிறார்களோ, அந்த இடத்தில் ஆள் நடமாட்டம் வந்தால் ஆபத்துதான்.
பாதுகாப்பு குறைபாடுகள்
டெல்லி நிர்பயா வழக்கிலும் ஆளில்லாத பஸ்ஸில், இருட்டான பஸ்ஸில் தன்னுடைய ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்தபோதுதான் அப்படியொரு விளைவு ஏற்பட்டு.. இங்கு நான் சரி, தவறு என்று பேசவில்லை.. பெண்களுக்கு எதிராகவும் நான் பேசவில்லை.. இது சுதந்திர நாடு.. நாம் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.. ஆனாலும் அங்கெல்லாம் காமக்கொடூரர்கள் வந்துவிடுகிறார்களே? பெண்களின் பாதுகாக்கவே இதையெல்லாம் சொல்கிறேன்.
கொல்கத்தா மருத்துவமனை கொடுமையில், அந்த பெண் தன்னுடைய ஆண் நண்பருடனா பேசி கொண்டிருந்தார்? இல்லையே.. ஆடிட்டோரியத்திலேயே பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுவிட்டாரே? அந்த அளவுக்கு பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன.
தேசம் முழுவதுமே இப்படியான பிரச்சனை இருக்கிறது.. எனவே எதற்கெடுத்தாலும் காவல்துறையையே குறை சொல்ல முடியாது.. சுயஉணர்வு என்று ஒவ்வொருவருக்கும் தேவை.. கோவை வழக்கிலும் உடனடியாக போலீஸ் வந்தார்களே? தனிப்படையும் அமைத்தார்களே? எனவே காவல்துறையை குறை சொல்ல முடியாது.
ஈசிஆர் ரோடு
ஈசிஆர் ரோட்டில் ஜெர்மன் பெண்ணுக்கு மட்டுமே இப்படியான கொடுமைகள் நடப்பதாக சொல்ல முடியாது.. நிறையவே நடந்தாலும், அதில் பாதி சம்பவங்கள் வெளியே வருவதில்லை..
அதேசமயம் பெண்களுக்கு அனைத்து சுதந்திரமும் இருக்கவே செய்கிறது. ஆனாலும் பாதுகாப்பு பிரச்சனை உள்ளதை இங்கு யாரும் சொல்வதில்லை. பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினரின் வலியை நினைத்து பாருங்கள்.. அது மிக கொடுமையானது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications