குருமா கேட்டது குத்தமா.. அடித்தே கொன்று மிளர வைத்த பரோட்டா மாஸ்டர்.. கோவையில் ஷாக்!
கோவை: கோவை சூலூர் அருகே பரோட்டா வாங்க சென்ற நபர் கூடுதலாக குருமா கேட்டிருக்கிறார். அப்போது பரோட்டா மாஸ்டர் தரமறுத்ததுடன் கூடுதல் குருமா கேட்டவரை கடை ஓனருடன் சேர்ந்து அடித்தே கொலை செய்தார். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே இருக்கும் முத்துகவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். நேற்று தனது குழந்தைகளுக்காக பரோட்டா வாங்குவதற்காக கரிகாலன் என்பவரது ஓட்டலுக்கு ஆரோக்கிய ராஜ் சென்றுள்ளார்.
அங்கு பரோட்டாவை பார்சலில் வாங்கிக் கொண்ட ஆரோக்கிய ராஜ், "கொஞ்சம் கூடுதலாக குருமா கொடுங்கள்", என கடையில் இருந்தவர்களிடம் கேட்டிருக்கிறார். அங்கிருந்த பரோட்டா மாஸ்டர் முத்து அதை கொடுக்க மறுத்திருக்கிறார். அப்போது முத்துவுக்கும் ஆரோக்கியராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அடித்துக்கொலை
அங்கு பரோட்டாவை பார்சலில் வாங்கிக் கொண்ட ஆரோக்கிய ராஜ், "கொஞ்சம் கூடுதலாக குருமா கொடுங்கள்", என கடையில் இருந்தவர்களிடம் கேட்டிருக்கிறார். அங்கிருந்த பரோட்டா மாஸ்டர் முத்து அதை கொடுக்க மறுத்திருக்கிறார். அப்போது முத்துவுக்கும் ஆரோக்கியராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மயங்கி விழுந்தார்
படுகாயம் அடைந்த ஆரோக்கியராஜ், அங்கேயே மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அருகே இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

சரமாரி தாக்குதல்
அங்கு ஆரோக்கியராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கியராஜின் உறவினர்கள், பரோட்டா கடை உரிமையாளர் கரிகாலனை தாக்கினர். அத்துடன் பரோட்டா மாஸ்டர் முத்துவையும் சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

இருவரும் கைது
தகவல் அறிந்து வந்த சூலூர் போலீசார், உறவினர்கள் தாக்குதலில் படுகாயம் அடைந்திருந்த பரோட்டா மாஸ்டரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அத்துடனர் கரிகாலன், பரோட்டா மாஸ்டர் முத்து ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரோட்டாவிற்கு கூடுதல் குருமா கேட்டதற்காக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications