Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை பெண் ஆட்டோ ஒட்டுநர் வைராக்கியம்.. நிறைவேறிய கனவு.. குடியரசு தலைவரிடம் அழைப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை எல்லோருக்கும் சொந்த வீடு கனவு இருக்கும். ஆனால் அதை சாத்தியப்படுத்துவது எளிதான விஷயம் இல்லை. கடின உழைப்பும், விடாமுயற்சியும் மிகவும் அவசியம். அதனுடன் அரசு உதவியும் கிடைப்பதால் பலரின் சொந்த வீடு கனவு நனவாகி வருகிறது. அந்த வகையில் கோவையில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றிய சங்கீதா. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ளார். அவரின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் குடியரசு தின விழாவை பார்வையிடுவதற்கும், குடியரசு தலைவர் வழங்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்வதற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். சங்கீதாவின் கணவர் பாலாஜி கட்டுமான தொழிலாளியாக உள்ளார். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த தம்பதிக்கு மாதம் ரூ.15,000 வருமானம் பெறுகிறார்கள். இவர்கள் மாதம் ரூ. 4,000 கொடுத்து வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சுமார் 20 வருடங்களுக்கு மேல் வாடகை வீட்டில் இருந்தனர்.

coimbatore-auto-driver-woman-called-for-repubic-day-celebration-in-delhi-president-office

ஆட்டோ ஓட்டுநரின் சொந்த வீடு கனவு

சங்கீதாவின் தாத்தாவுக்கு சொந்தமாக பூர்வீக நிலம் இருக்கிறது. ஆனாலும் பொருளாதாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக வாடகை வீட்டிலேயே வசித்து வந்தார்கள். மகன்கள் இருவரும் அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். தங்களின் சிறிய சேமிப்பை வைத்து சங்கீதா - பாலாஜி தம்பதி சொந்த வீடு கட்டுவதற்கு முயற்சி செய்தார்கள்.

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மற்றும் மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ. 2.10 லட்சம் மானியம் பெற்றனர். மேலும் கூட்டுறவு வங்கியில் இருந்து ரூ.5 லட்சம் கடன் பெற்று தங்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்கியிருக்கிறார்கள். தற்போது தங்கள் குடும்பத்தினருடன் கோவையில் சொந்த வீட்டில் வசித்து வருகிறார்கள்.

குடியரசு தின விழாவிற்கு அழைப்பு

கடின உழைப்பு, பொறுமை மற்றும் விடா முயற்சியால் கனவை சாத்தியப்படுத்திய சங்கீதாவுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பாராடுகள் குவிந்து வருகின்றன. அரசுத்தரப்பில் அவருக்கு ஏற்கனவே உதவிக்கரம் நீட்டப்பட்டது. பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டி பயனடைந்த சங்கீதாவை கௌரவிக்கும் வகையில் டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வருகிற ஜனவரி 26 ஆம் தேதி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவரின் அலுவலகமான ராஷ்ட்ரபதி பவனில் குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு பேரணியை நேரில் காண்பதற்கு சங்கீதா மற்றும் அவரின் கணவருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெருமிதம்

"இது சங்கீதாவின் கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்" என்று தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் அவரை பாராட்டியுள்ளனர். இந்த தகவலால் சங்கீதா சந்தோஷமடைந்துள்ளார். இதுகுறித்து சங்கீதா கூறுகையில், "அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தால் என் வாழ்க்கை மாறியுள்ளது. எனக்கு வீடு கட்ட உதவிய மத்திய, மாநில அரசுக்கு மிகவும் நன்றி" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+