இதுதான் தீபாவளி பரிசு.. கோவை அவிநாசி சாலை மேம்பாலம்.. நீலாம்பூர் வரை விரிவடைய போகுதாம்
கோவை: கோவை அவிநாசி சாலையில் 10.10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், அந்த பாலத்தை மேலும் 5 கி.மீ தொலைவுக்கு நீலாம்பூர் வரை விரிவுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவை மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள் கோவையின் அடையாளமாக இருந்த நிலையில், தற்போது ஐடி நிறுவனங்கள் வரத்தொடங்கிவிட்டன. கோவையின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.

கோவை மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. காந்திபுரம், உக்கடம், திருச்சி சாலை, கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் கட்டப்பட்ட மேம்பாலங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. அதேபோல அவிநாசி சாலையிலும் பிரமாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
கோவை அவிநாசி சாலை முக்கிய மையப்பகுதியாக உள்ளது. கோவை விமான நிலையம், டைடல் பார்க், ஏராளமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள் அங்கு தான் உள்ளன. திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அந்த வழியாகத்தான் கோவைக்கு வரவேண்டும். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் பிரச்னை அதிகரித்து வருகிறது.
இதற்கு அரசு தீர்வளிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து உப்பிலிபாளையம் பகுதியில் இருந்து கோல்டுவின்ஸ் வரை சுமார் 10.10 கி.மீ தொலைவுக்கு, ரூ.1,621 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக மேம்பால கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
17.35 மீட்டர் அகலத்தில் நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கிருஷ்ணம்மாள் கல்லூரி, ஜிர்ஜி பள்ளி, கேஎம்சிஹெச் மருத்துவமனை, பிஎஸ்ஜி கல்லூரி, லட்சுமி மில்ஸ் பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதமே பணிகளை முடிக்க திட்டமிட்டிருந்தனர். தற்போது வரை சுமார் 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன.
மேம்பாலம் பணிகள் தொடங்கும்போதே, அதை நீலாம்பூர் வரை நீட்டிக்க மக்கள் கோரிக்கை வைத்தனர். விமான நிலையத்தை விரைந்து அடைவதற்காகவும், அந்தப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையிலும் மேம்பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். ஏற்கனவே இந்த மேம்பாலம் 10 கி.மீ தொலைவில் உள்ளது. தற்போது மேலும் 5 கி.மீக்கு நீட்டிப்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். போக்குவரத்து நெரிசலை நன்கு ஆய்வு செய்து, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு சமர்பிப்போம்.
இதற்கு பெரியளவு நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்காது. குறைந்தளவிலான நிலம் தான் தேவைப்படுகிறது. இதற்கு கூடுதலாக ஒரு தளம் அமைத்தாலே போதுமானதாக இருக்கும். வருகிற டிசம்பர் மாதத்துக்குள் 10.10 கி.மீக்கான பாலத்துக்கான பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கு நடுவே பாலத்தை நீட்டிப்பதற்கான ஆய்வுகளும் நடைபெறும்.
மேலும் கிருஷ்ணம்மாள் கல்லூரி சந்திப்பில் ரூ. 7 கோடி மதிப்பில் நடைமேம்பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எஸ்கலேட்டர், லிப்ட், படிக்கட்டு உள்ளிட்ட வசதிகளுடன் மக்கள் எளிதாக சாலையை கடப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த பாலத்தை மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்கும். இது செயல்படும் விதத்தை பொறுத்து அவிநாசி சாலையில் மேலும் சில இடங்களில் நடைபாலம் அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications