கோவையில் ரூ.1,621 கோடியில் பிரம்மாண்டம்.. அடையாளமாகும் அவினாசி ரோடு மேம்பாலம்.. எப்போது திறப்பு?
கோவை: கோவை அவினாசி ரோட்டில் பீளமேடு கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் சந்திப்பு வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.1,621 கோடி செலவில் நடைபெற்று வரும் பிரமாண்ட மேம்பால பணிகள் வெகுவிரைவாக முடிக்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னையை பொறுத்தவரை ஜிஎஸ்டி சாலை எப்படி முக்கியமானதோ, அதுபோல் கோவையை பொறுத்த வரை அவினாசி சாலை மிக முக்கியமானது... கோவை மக்கள் அவினாசி சாலை வழியாக திருப்பூர், ஈரோடு, சேலம், சென்னை, பெங்களூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பயணிப்பார்கள்.

இந்த சாலையை பொறுத்தவரை, ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவை நகரத்தில் லட்சுமி மில்ஸ் தொங்கி, பாப்பநாயக்கன் பாளையம், நவ இந்தியா, ஹோப் காலேஜ், பீளமேடு, வரை கடுமையான வாகன நெருக்கம் உள்ள பகுதியாகும். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.
இந்த வாகன நெரிசலை குறைக்க வேண்டி, கோவை அவினாசி ரோட்டில் பீளமேடு கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் சந்திப்பு வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கியது. ரூ.1,621 கோடி செலவில் இந்த மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கோவை அவினாசி மேம்பாலம் எப்படி அமைகிறது: கோவை அவினாசி மேம்பாலம் 305 தாங்கு தூண்களுடன், 17.25 மீட்டர் அகலத்தில் கான்கிரீட் காரிடர்களுடன் அமைக்கப்பட்ட வருகிறது. 4 வழி சாலையாக அமைக்கப்படும் இந்த மேம்பாலத்தில் கோவை அண்ணாசிலை, நவ இந்தியா, ஹோப்கல்லூரி, விமானநிலையம் உள்பட 7 இடங்களில் ஏறுதளம், இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம் குறித்து அதிகாரிகள் கூறும் போது, அவினாசி மேம்பாலத்தில் தற்போதுவரை 63 சதவீத பணிகள் முடிவடைந்திருக்கிறது. இறங்குதளம், ஏறுதளம் அமைப்பது உள்ளிட்ட 37 சதவீத பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இங்கு மேம்பால பணிக்காக 4 இடங்களில் உயரமான லாஞ்சர்கள் அமைக்கப்பட்டு கான்கிரீட் காரிடர்கள் இணைக்கப்படுகிறது. மொத்தம் 304 கான்கிரீட் தள காரிடர்களில் இதுவரை 190 அமைக்கப்பட்டு இருக்கிறது. மீதம் உள்ள 114 கான்கிரீட் காரிடர்கள் இணைக்கும் பணிகள் நடைபெறும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஹோப் கல்லூரி அருகே ரயில்வே பாலத்துக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் பாலத்தின் இருபுறமும் தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டு 500 மீட்டர் நீளத்துக்கு இரும்பு தூண் அமைக்கப்பட்டு அதன் மீது கான்கிரீட் தூண்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இன்னும் 15 இடங்களில் தாங்கு தூண்கள் அமைக்க வேண்டி உள்ளது. அடுத்த 8 மாதங்களில் பணிகளை முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவினாசி ரோடு மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்படும். மழைநீர் வடிகால் வசதியும் செய்யப்படும். வரும் ஆகஸ்ட் மாதத்தில் மேம்பாலம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்கள்.
உப்பிலைப்பாளையம் தொடங்கி கோல்டுவின்ஸ் அருகே 10 கிலோமீட்டருக்கு அமைக்கப்படும் இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால் அவினாசி சாலையில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும். அதேநேரம் கோல்டுவின்ஸ் முதல் நீலாம்பூர் வரை 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலத்தை நீடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். அப்படி மேம்பாலத்தை நீடிக்க 500 கோடி ரூபாய் செலவாகும் என்றும், அரசு திட்டத்தை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications