கோவையில் மாட்டு வண்டியில் ஏறிய பொண்ணு.. அந்த மாட்டு வண்டியை ஓட்டுறது யாருப்பா? தூள் கிளப்பிய தம்பதி
கோவை: தமிழ் கலாச்சாரத்தை தலைநிமிர செய்யும் வகையில் கோவை மாவட்டத்தில் ஒரு ருசிகர சம்பவம் நடந்து உள்ளது. அங்கு புதிதாக திருமணமான புதுமண தம்பதி மாட்டு வண்டியில் புகுந்த வீட்டுக்கு சென்று அசத்தியிருக்கிறார்கள்.. இந்த நிகழ்வை சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரண்டு வந்து மக்கள் கண்டுகளித்தனர்.. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அந்த காலத்தில் திருமணம் முடிந்தவுடன், மணமக்கள் மாட்டு வண்டிகளில் பயணம் செய்து ஊர்வலமாக தங்களது வீட்டிற்கு செல்வர். இப்படி அனைத்து பயன்பாட்டிலும் மாட்டு வண்டிகள் முக்கியத்துவம் பெற்று இருந்தது.

குதிரை வண்டி, சாரட் வண்டி
ஆனால், இப்போதைய திருமணங்களில் விதவிதமான காஸ்ட்லி கார்களில் மணமக்கள் செல்கிறார்கள்.. எனினும், சமீப நாட்களாகவே பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பொருட்டு, கிராம முறைப்படி இன்றைய இளைஞர்கள் தங்களது திருமணத்தை செய்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்காக குதிரை சாரட் வண்டிகளிலும், மாட்டு வண்டிகளிலும் மணமக்கள் ஊர்வலமாக செல்வதை பார்க்க முடிகிறது.
அதிலும், காற்று மாசு குறைத்து, பசுமையை காப்பதற்காக, மணப்பெண்ணை மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்லும் நிகழ்வுகள் அதிகமாகவே நடந்து வருகிறது.
மதுரையில் நெற்கதிர்கள்
சமீபத்தில்கூட, மதுரை கதிர் என்ற கணேஷ் BA பட்டதாரி, சிவகங்கை சிவரஞ்சனியை மணமுடித்தபோது, இப்படித்தான் மாண்டு வண்டியை பயன்படுத்தினார்கள்.. திருமணம் முடித்து மண்டபத்தில் இருந்து மணமகன் வீட்டிற்கு புறப்பட்ட மணமக்கள், தாங்கள் முன்னோர்கள் பயணம் செய்ததை நினைவு கூறும் விதமாக மாட்டு வண்டியில் பயணம் செய்திருந்தனர்..
அப்போது மணமகன் கணேஷ் மாட்டு வண்டியை ஓட்ட மணமகள் சிவரஞ்சனி மகிழ்ச்சி நிறைந்த உற்சாகத்துடன் ஊர்வலமாக சென்றார்.. அதுமட்டுமல்ல, வீட்டிற்கு செல்லும் முன்பாக நெல் கதிர்களை உலர வைத்துக் கொண்டிருந்த விவசாயிகளிடம் சென்று குவிக்கப்பட்டிருந்த நெல்மணிகளை வணங்கியதுடன், தாங்கள் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளையின் காலில் விழுந்து வணங்கி வழிபட்டு வீட்டிற்குள் சென்றார்கள்.
மாட்டு வண்டி ஊர்வலம்
இன்றைய நவீன காலத்தில் வாகனங்கள் அதிகரித்து வருவதால் புகை காற்று மாசு அதிகரித்து வருகின்றது. இதனை குறைத்து பசுமையை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்கானவே இப்படியான மாட்டு வண்டி ஊர்வலத்தை நடத்தி கவனத்தை ஈர்த்து வருகிறார்கள் இன்றைய இளைஞர்கள்,
அந்தவகையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலும், இப்படியொரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. பொள்ளாச்சி அருகே உள்ளது அர்த்தநாரிபாளையம்.. இங்கு வசித்து வரும் சிவப்பிரகாஷ் என்பவருக்கும், கோவையை சேர்ந்த காவியா என்பவருக்கும் நேற்று பொள்ளாச்சி அடுத்த கரட்டு மடத்திலுள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
கோவை புதுமணத்தம்பதி
திருமணம் முடிந்தவுடனே, மணமகன், தன்னுடைய புதுமனைவியை தனது பூர்வீக வீடான அர்த்தநாரிபாளையத்திற்கு மாட்டு வண்டியிலேயே பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்... இதற்காக திருமணமான கையோடு, தனது மனைவி காவியாவை மாட்டு வண்டியிலேயே உட்கார வைத்து கூட்டி சென்றார். கரட்டு மடத்தில் இருந்து அர்த்தநாரிபாளையம் வரையிலும் அதாவது 5 கி.மீட்டர் தூரத்துக்கு மணமகனே மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றிருக்கிறார்..
மாப்பிள்ளை பொண்ணுக்கு வாழ்த்து
திருமணமான புதுமண தம்பதியினர் மாட்டு வண்டியில் வருவதை கேள்விப்பட்டதுமே, அந்த வழியாக சென்றவர்களும், சுற்றுவட்டாரத்தினரும் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். அப்போது மணமக்களுக்கு தங்களது வாழ்த்தையும் தெரிவித்தனர்.. இந்த மாட்டு வண்டி ஊர்வல வீடியோதான் இணையத்தில் வெளியாகி, பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
நம்முடைய பாரம்பரியத்தை மறக்காமல் மாட்டு வண்டிகளை பயன்படுத்தி வருவதுடன், காளை மாடுகள் குறித்து விழிப்புணர்வையும் இப்படி ஏற்படுத்தி வருவதும், தமிழக மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications