அதை விடுங்க.. மோடியிடம் ராகுல் ஏன் அப்படி பேசினார் தெரியுமா.. நம்ம ஸ்டாலின்தான் காரணம்.. உதயநிதி நச்
: எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து கோவையில் பிரச்சாரம் செய்தார் உதயநிதி
கோவை: வாக்களித்து வெற்றி பெறச்செய்வோம் என்று சொல்றீங்க.. ஆனால் செஞ்சீங்களா? என கோவை மக்களிடம் உரிமையாக கேள்வி எழுப்பினார் உதயநிதி ஸ்டாலின்.. !
கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கோவை சுந்தராபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கடைசி நாள் பிரச்சாரம் என்பதால், திமுக தரப்பு உள்ளிட்ட பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர்.. அப்போது "எல்லோரும் ஊசி போட்டீர்களா" என்று பேச்சை ஆரம்பித்தார் உதயநிதி.

ஊசி போட்டாச்சா?
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டாலே போதும் என்று சொன்னவர், நீங்க இப்படி கூட்டமாக திரண்டிருப்பதை பார்க்கும் போது கண்டிப்பாக திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை கொடுப்பீர்கள் என்று தெரிகிறது.. ஆனாலும் உங்களை நம்பமாட்டேன்.. வாக்களித்து வெற்றி பெறச்செய்வோம் என்று சொல்றீங்க.. ஆனால் செஞ்சீங்களா? என உரிமையாக கேள்வி எழுப்பினார்... பின்னர் பிரச்சாரத்தில் உதயநிதி தொடர்ந்து பேசியதாவது:

ஏமாத்திட்டீட்களே
தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வெற்றி பெற்ற போதும் கோவை மாவட்ட மக்கள் ஏமாத்திட்டீங்க.. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னதை செய்துள்ளார்.. அதிமுக ஆட்சி வீட்டில் மக்களை முடக்கியது தான் அவர்களின் சாதனை.. ஆனால் உயிரிழப்புகளை தடுக்க 7 கோடி தடுப்பூசிகளை போட்டது திமுக தான்.. அதிமுக ஒரு கோடி தடுப்பூசி தான் போட்டார்கள்.. இது போன்ற திட்டங்களால் தான் தனியார் நாளிதழ் நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இந்தியாவின் நம்பர் ஒன் சிஎம் ஸ்டாலின் தான் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

6 லட்சம் கோடி கடன்
அதிமுக ஆட்சி முடிந்து செல்லும்போது கஜனாவில் 6 லட்சம் கோடி கடனை வைத்து சென்றனர்.. ஆனாலும் திமுக ஆட்சியமைந்தவுடன் பால் விலை குறைப்பு, இலவச பேருந்து பயணம் பெண்களுக்கு, என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.. கண்டிப்பாக நிதிநிலை சரி செய்யப்பட்டு விரைவில் பெண்களுக்கு மாதாமாதம் உரிமைத்தொகை ஆயிரம் வழங்கும் திட்டம் துவங்கப்படும்..

சவால்
தமிழகத்தில் ஒரு போதும் காலூன்ற முடியாது என்று ராகுல் காந்தி மோடிக்கு சவால் விட்டுள்ளார்.. இதற்கு காரணம் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் சிம்ம சொப்பனமாக ஸ்டாலின் விளங்குகிறார் என்பதால்தான்.. உங்களை இந்த முறை நம்பலாமா? ஊழல்மணிக்கு சாவுமணி அடிப்பது நிச்சயம்.. ஏற்கனவே 110 கோடி ரூபாயை முடக்கிவிட்டோம்.. வெள்ளலூர் குப்பைக்கிடங்கு இடம் மாற்றப்படும்..

எடப்பாடி பழனிசாமி
27 அமாவாசை தான் திமுக ஆட்சி என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிட்டு வர்றார்.. ஆனால் தமிழகத்தில் உள்ள 2 அமாவாசைகள் யார் என்பது உங்களுக்கே தெரியும்.. 2 பேரையும் வீட்டுக்கு அனுப்பிட்டீங்க.. ஆனால் ஓட ஓட விரட்ட வேண்டும் என்பதற்காக திமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்"என்று கேட்டுக் கொண்டார் உதயநிதி ஸ்டாலின்,
-
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications