நான் "அவங்களை" மாதிரி யூகத்தில் பேசலை.. கார் உள்ளே என்ன இருந்தது தெரியுமா? செந்தில் பாலாஜி சுளீர்
கோயம்புத்தூர்: சிலரை போல நான் யூகத்தின் அடிப்படையில் பேச மாட்டேன், இந்த கார் வெடிப்பு மூலம் சிலர் அரசியல் செய்ய பார்க்கிறார்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஆளும் திமுக மீது பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை பலர் சேர்ந்து செய்து இருக்கிறார்கள்.
ஆனால் முபின் என்று ஒருவர் மீது மட்டுமே குற்றச்சாட்டுகளை அடுக்குவது தவறு. டிஜிபி ஒருவர் மீது மட்டும் குற்றச்சாட்டு வைக்கிறார். அவர் வைக்கும் குற்றச்சாட்டு காமெடியாக இருக்கிறது. நிலைமை மோசமாகிக்கொண்டு இருக்கிறது, என்று அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்தார்.
இந்த நிலையில் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் குறித்து இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அண்ணாமலையின் பெயரை கூட பயன்படுத்தாமல் செந்தில் பாலாஜி இதற்கு பதில் அளித்தார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில், இந்த சம்பவம் தொடர்பாக விரைந்து கைது நடவடிக்கை செய்யப்பட்டு உள்ளது. விரைந்து விசாரணை முடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு கட்சி மட்டும் இதில் புகார் வைத்து வருகிறது. மட்டகரமான அரசியலை இதில் சிலர் செய்து வருகிறார்கள். எப்படியாவது இதை அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இவர்கள் செயல்படுகிறார்கள். எங்காவது இந்த சம்பவத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதா? சொல்லுங்கள்?

அண்ணாமலை
யாராவது ஏதாவது பேசுவார்கள். தீபாவளி இதன் காரணமாக பாதிக்கப்பட்டதா? எத்தனை தீவிரவாத தாக்குதலில் "அந்த" கட்சியை சார்ந்தவர்கள் வாய் திறந்தார்கள். அங்கே அவர்கள் எங்கே போனார்கள். மதுரையில் ராணுவ வீரரின் மரணத்தை வைத்து அரசியல் செய்தார்களே அவர்கள் யார்? அப்போது அவருடைய ஆடியோ வெளியானதே? அவர்கள் எல்லாம் இதை பற்றி பேசலாமா?

யூகம்
ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. இயல்பு நிலை நீடிக்கிறது. இவர்கள் ஏன் இப்போது பந்த் நடத்த நினைக்கிறார்கள். இதை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறார்களா? காருக்குள் குண்டு இருந்தது என்று கூறுகிறார்கள். காருக்குள் சிலிண்டர் இருந்தது. பால் ரஸ், ஆணிகள் தனி தனியாக இருந்தன. இவர்கள் குண்டை உருவாக்கிவிட்டு அதை கொண்டு செல்லவில்லை. அதனால் சிலிண்டர் வெடிப்பு என்றுதான் இதை கூற முடியும்.

அந்த கட்சி
ஏற்கனவே இதில் விசாரணையை சிறப்பாக செய்துஇருக்கிறோம். அந்த கட்சி இதை வைத்து எப்படியாவது அரசியல் செய்ய முடியாதா என்று பார்க்கிறார். என்னுடன் வாருங்கள் வந்து பாருங்கள் வேண்டுமென்றால். எங்கே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது என்று கூறுங்கள். நான் மற்றவர்களை மாதிரி சம்பவம் நடந்ததும்.. உடனே செய்தியாளர்களை சந்தித்து பொய்யாக பேச முடியாது. நான் யூகத்தின் அடிப்படையில் பேச முடியாது.

பந்த்
கடையடைப்பு என்று இவர்கள் அத்துமீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடையடைப்பு என்று கூறி வியாபாரிகளை அச்சுறுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நான் மற்றவர்களை போல யூகத்தின் அடிப்படையில் பேச முடியாது. கோவையில் அமைதி நிலவுகிறது. பந்த் என்ற முறையில் இவர்கள் பதற்றமான சூழ்நிலையை உருவாக்க பார்க்கிறார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
ஹார்டு டிஸ்க் மாயமா? மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப முயற்சி.. விளாசிய செந்தில் பாலாஜி -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications