கைமாறும் "பைல்கள்".. மப்டியில் இறங்கிய தலைகள்.. கோவையில் வட்டமிடும் "என்ஐஏ".. பரபர பின்னணி
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு தொடர்பாக தற்போது என்ஐஏ விசாரணை நடத்த உள்ளது.
கோயம்புத்தூர் கார் வெடிப்பு சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. தேசிய அளவில் இந்த வெடிப்பு பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூரில் அதிகாலை கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது.

என்ஐஏ
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக தற்போது என்ஐஏ விசாரணை நடத்த உள்ளது. பொதுவாக என்ஏஐ விசாரணை 2-3 நாட்கள் கழித்துதான் நடத்தப்படும். இந்த வழக்கில் நேற்றுதான் உபா சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இதையடுத்து அடுத்த 3 நாட்களில் எப்படியும் என்ஐஏ விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றே என்ஐஏ தனது விசாரணையை தொடங்கிவிட்டது. இதற்காக என்ஐஏ அதிகாரிகள் நேற்று இரவு கோயம்புத்தூர் வந்தனர்.

வழக்கு
இந்த வழக்கில் தற்போது பைல்கள் கைமாற வேண்டும். அதன்படி கோவை போலீசார் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனே தமிழ்நாடு உள்துறை அமைச்சகத்திடம் கொடுப்பார்கள். அவர் ஆவணங்களை சரி செய்துவிட்டு அதை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கொடுப்பார்கள். உள்துறை அலுவலகம் இந்த ஆவணங்களை சோதனை செய்யும். அதன்பின்பே அவர்கள் என்ஐஏ தெற்கு மண்டல அதிகாரிகளிடம் ஆவணங்களை கொடுப்பார்கள்.'

பைல்கள்
அதன்பின்புதான் என்ஐஏ விசாரணைகளை நடத்தும். ஆனால் அதற்கு முன்பாக இந்த முறை என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை முன்கூட்டியே நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி கோப்புகள் கைக்கு முறையாக வரும் முன்பே.. தமிழ்நாடு போலீசாருடன் இணைந்து கோவையில் இன்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். 20க்கும் மேற்பட்ட நபர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.

முபின்
முக்கியமாக குண்டுவெடிப்பிற்கு காரணமான, மறைந்த முபின் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். அங்கு விசாரணை நடத்திய பின் அவர்களின் உறவினர்கள் வீடுகளில் விசாரணை நடத்த உள்ளனர். அதன்பின் பாலக்காடு உள்ளிட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இருப்பதாக கருதப்படும் இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். ஏற்கனவே என்ஐஏ அதிகாரிகள் அங்கு மப்டியில் இருந்து மக்களோடு மக்களாக விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம்












Click it and Unblock the Notifications