டெல்லி பறந்த பைல்கள்! ஸ்டாலின் பரிந்துரைக்கு கிரீன் சிக்னல்! கோவை கார் வெடிப்பை விசாரிக்கும் என்ஐஏ

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் கார் வெடிப்பு விசாரணையை என்ஐஏ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்புத்தூர் கார் வெடிப்பு தொடர்பாக நேற்று முதல்நாள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, தலைமை செயலாளர் இறையன்பு, உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்தார்.

இந்த ஆலோசனை முடிவில் இந்த விசாரணையை என்ஐஏவிற்கு கொடுக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான பரிந்துரையை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டார்.

ஸ்டாலின் பரிந்துரை

ஸ்டாலின் பரிந்துரை


இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால், இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது; மேலும், கோவை மாநகரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்திட கரும்புக் கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைத்திடவும் மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள், சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில், காவல் துறையில் ஒரு சிறப்புப் படையை உருவாக்கிடவும்

அறிக்கை

அறிக்கை

கோவை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும், மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முக்கிய பகுதிகளிலும், கூடுதல் நவீன கண்காணிப்புக் கேமராக்களை விரைவில் பொருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்: மாநிலத்தின் உளவுப் பிரிவில் கூடுதல் காவல் துறை அலுவலர்களை நியமனம் செய்திடவும். இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைப் பற்றியும், அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களைப் பற்றியும் நுண்ணிய தகவல்களை அளிப்போருக்கு தக்க பாதுகாப்பினை வழங்கிடவும், ஊக்குவித்திடவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு

மத்திய அரசு

இதையடுத்து மத்திய அரசு இந்த பரிந்துரையை ஏற்றுள்ளது. அதன்படி என்ஐஏ விசாரணைக்கு முறையாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பே என்ஐஏ அதிகாரபூர்வமற்ற முறையில் விசாரணையை தொடங்கிவிட்டது. இந்த வழக்கில் தற்போது பைல்கள் கைமாற வேண்டும். அதன்படி கோவை போலீசார் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனே தமிழ்நாடு உள்துறை அமைச்சகத்திடம் கொடுப்பார்கள். அவர் ஆவணங்களை சரி செய்துவிட்டு அதை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கொடுப்பார்கள்.

என்ன நடக்கும்

என்ன நடக்கும்

உள்துறை அலுவலகம் இந்த ஆவணங்களை சோதனை செய்யும். அதன்பின்பே அவர்கள் என்ஐஏ தெற்கு மண்டல அதிகாரிகளிடம் ஆவணங்களை கொடுப்பார்கள். கோயம்புத்தூர் கார் வெடிப்பு தொடர்பாக தற்போது என்ஐஏ டிஐஜி கேபி வந்தனா விசாரணை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தமிழ்நாடு அரசு இந்த வழக்கை என்ஐஏவிற்கு மாற்றியது ஏன் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்தார். அதில், இந்த வழக்கில் தமிழ்நாடு மட்டும் சம்பந்தப்படவில்லை. மற்ற மாநிலங்களும் இதில் தொடர்பு கொண்டு உள்ளது. கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ளவர்களும் இந்த விவகாரத்தில் தொடர்பு கொண்டவர்களாக சந்தேகிக்கப்படுகிறது. வெளிமாநிலங்கள் தொடர்பு இருப்பதாக மத்திய அமைப்பு விசாரிப்பது எளிதாக இருக்கும். இதன் காரணமாக என்ஐஏ விசாரித்தால் சரியாக இருக்கும் என்பதால் வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது, என்று விளக்கம் அளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+