கோவை- ராமேஸ்வரம் ரயில் சேவைக்காக எத்தனை ஆண்டுகள்தான் காத்திருப்பது? தென் மாவட்டங்கள் ஏக்கம்!
கோவை: கோவை- ராமேஸ்வரம் இடையே ரயில் சேவைக்காக எத்தனை ஆண்டுகள்தான் காத்திருப்பது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். கிட்டதட்ட கோரிக்கை வைத்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறதாம்.
இதுகுறித்து தமிழ் ரயில் தகவல் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: # இராமேஸ்வரம்: தொழில் நகரமான கோயம்புத்தூரையும், ஆன்மீக பூமியான இராமேஸ்வரத்தையும் இணைக்கும் ரயில் சேவைக்காகத் தென் தமிழக மக்கள் படும் பாடு சொல்லி மாளாது. ஒரு பக்கம் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே எட்டிப் பார்க்கும் ரயில்... மறுபக்கம் அகலப்பாதை பணிக்காக நிறுத்தப்பட்டு, பணிகள் முடிந்தும் மீண்டும் வராத ரயில்... என இரட்டை ஏமாற்றத்தில் தவிக்கிறார்கள் பயணிகள்.

புதன்கிழமை மட்டும் தான் 'தரிசனம்'!
தற்போதைய நிலையில், கோயம்புத்தூர் - இராமேஸ்வரம் இடையே (வண்டி எண்: 16618/16617) இயங்கும் ஒரே ஒரு ரயில் சேவை வாராந்திரச் சேவையாக மட்டுமே உள்ளது.
செவ்வாய்: கோயம்புத்தூரிலிருந்து இரவு புறப்படும்.
புதன்: காலை இராமேஸ்வரம் வந்து சேரும்.
பின்னர், காலை முதல் இரவு வரை சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக இராமேஸ்வரம் நிலையத்தில் காலி பெட்டிகளாகக் காத்திருந்து, மீண்டும் புதன்கிழமை இரவு கோயம்புத்தூர் நோக்கிக் கிளம்புகிறது.
வாரத்தில் மீதமுள்ள 6 நாட்களும் ஈரோடு, கரூர், திருச்சி வழியாக இந்த இரண்டு முக்கிய நகரங்களுக்கும் இடையே நேரடி ரயில் சேவை என்பதே கிடையாது என்பது வேதனையான உண்மை.
ராஜ்கோட் ரயிலின் மிச்சமா? (Rake Sharing) ஏன் இந்த ரயில் வாராந்திரச் சேவையாகச் சுருங்கிப் போனது?
இந்த ரயில் கோயம்புத்தூர் - ராஜ்கோட் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் பெட்டி பகிர்மானம் (Rake Sharing Arrangement - RSA) செய்கிறது.
அதாவது, குஜராத் மாநிலத்திற்குச் செல்லும் ரயிலின் ஓய்வு நேரத்தில் தான், நம் தென் மாவட்டங்களுக்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கென தனிப்பட்ட ரயில் பெட்டிகள் (Dedicated Rake) ஒதுக்கப்படாததே சேவை குறைவாக இருப்பதற்குக் காரணம்.
15 ஆண்டுகாலப் போராட்டம்!
2013-ம் ஆண்டுக்கு முன்னதிலிருந்தே, அதாவது சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த ரயில் வாராந்திரச் சேவையாக மட்டுமே நீடித்து வருகிறது. #ஈரோடு, #கரூர், #திருச்சி, #புதுக்கோட்டை, #காரைக்குடி வழியாக இயங்கும் இந்த ரயிலை, 'தினசரி ரயிலாக' மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எத்தனையோ முறை ரயில்வே நிர்வாகத்திடம் வைக்கப்பட்டும், அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது.
பழனி வழித்தடமும் 'கானல் நீர்'!
மக்களின் வேதனை இத்துடன் முடியவில்லை. முன்பொரு காலத்தில் கோயம்புத்தூர் - இராமேஸ்வரம் இடையே #பொள்ளாச்சி, பழனி, #திண்டுக்கல், #மதுரை வழியாக ஒரு ரயில் ஓடிக்கொண்டிருந்தது.
அகலப்பாதை மாற்றப்பணிகளுக்காக (Gauge Conversion) அந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
பணிகள் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும், பாதைகள் புதுப்பிக்கப்பட்டும், அந்த பழைய ரயில் சேவை இன்றுவரை மீண்டும் தொடங்கப்படவே இல்லை.
இந்த வழித்தடம் மீட்டெடுக்கப்பட்டால், பொள்ளாச்சி, பழனி, மதுரை பகுதி மக்களும் இராமேஸ்வரம் மற்றும் கோயம்புத்தூரை எளிதாகச் சென்றடைய முடியும்.
தவிக்கும் 3 மாவட்டங்கள்!
கோயம்புத்தூர் என்பது கல்வி, மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்புக்கான மையமாகும். அங்குச் செல்ல:
🔰இராமநாதபுரம் (பரமக்குடி, இராமேஸ்வரம்)
🔰சிவகங்கை, (மானாமதுரை, தேவகோட்டை, காரைக்குடி)
🔰புதுக்கோட்டை
ஆகிய மூன்று மாவட்ட மக்களுக்கும் இருக்கும் ஒரே 'ரயில் நம்பிக்கை' தற்போதைய வாராந்திர ரயில் மட்டுமே. பேருந்துகளில் அதிக கட்டணம் கொடுத்துச் செல்ல முடியாத சாமானிய மக்கள், வாரத்தில் ஒரு நாள் மட்டுமே கோயம்புத்தூர் செல்ல முடிகிறது.
மக்களின் எதிர்பார்ப்பு என்ன?
இராமேஸ்வரம், இராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை பகுதி மக்களின் கோரிக்கைகள் இவைதான்:
🔰ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் வாராந்திர ரயிலை (via திருச்சி, காரைக்குடி), தினசரி ரயிலாக மாற்ற வேண்டும்.
🔰அகலப்பாதை பணிக்காக நிறுத்தப்பட்ட பொள்ளாச்சி, பழனி, மதுரை வழியிலான கோயம்புத்தூர் - இராமேஸ்வரம் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications