சீருடையில் காவலர் செய்த அசிங்கம்.. கோவை பேருந்தில் கல்லூரி மாணவிக்கு நடந்த துயரம்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பாதிப்படைந்துள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. திமுக ஆட்சியில் இருந்த சட்டம் ஒழுங்கு பாதிப்பு தவெக ஆட்சியிலும் தொடர்கிறது. பெண்கள் பாதுகாப்புக்காக சிங்க பெண் படை அமைக்கப்பட்டும் குற்றங்கள் குறையவில்லை. கோவையில் சீருடையில் இருந்த போலீஸ்காரர் ஒருவரே பேருந்தில் கல்லூரி மாணவிக்கு உதவுவது போல நடித்து பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிவேந்தன். காவலரான இவர் கோவை போத்தனூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டருக்கு ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அலுவல் நிமித்தமாக மணிவேந்தன் நேற்று முன்தினம் பொள்ளாச்சி சென்றுள்ளார். பிறகு அங்கிருந்து பேருந்து மூலம் கோவை திரும்பியுள்ளார். மணிவேந்தன் காவல் சீருடையில் இருந்தார். மாலை நேரம் என்பதால் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இருந்தனர்.

Police Student

பேருந்தில் பாலியல் தொந்தரவு

கிணத்துக்கடவு நிறுத்தத்தில் ஏராளமான கல்லூரி மாணவிகள் பேருந்தில் ஏறியுள்ளனர். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது 19 வயது மாணவி ஒருவர் பேருந்தில் ஏறுவதற்கு மணிவேந்தன் உதவி செய்துள்ளார். அவரின் உதவியால் மாணவி பேருந்தில் ஏறி அவருக்கு நன்றி சொல்லிவிட்டு நகர முயற்சித்தார். ஆனால் மணிவேந்தன் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பேருந்து கூட்டமாக இருந்ததால் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தினார்.

அதிர்ச்சியடைந்த மாணவி செய்வதறியாமல் தவித்தார். மணிவேந்தன் காவல் சீருடையில் இருந்ததால் அவர் மிகுந்த அச்சத்தில் இருந்தார். பேருந்து மதுக்கரை காவல்நிலைய எல்லை அருகே வந்தபோது மாணவி இறங்கிவிட்டார். அவருடன் மேலும் சில மாணவிகளும் இறங்கியுள்ளனர். காவலர் பாலியல் தொந்தரவளித்து குறித்து சக மாணவிகளிடம் அவர் தெரிவித்தார். அவர்கள் மாணவியை பத்திரமாக வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

போலீஸ் சஸ்பெண்ட்

சம்பவம் குறித்து மாணவி தன் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்தவர்கள் பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் விசாரித்ததில் மணிவேந்தன் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதையடுத்து மணிவேந்தன் மீது பாலியல் சீண்டல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

பிறகு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இண்டாம் நிலை காவலரான மணிவேந்தன் கதவல்முறை ஒழுக்கம், நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டுள்ளார். மாணவியளித்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். காவல்துறையினர் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டால் உரிய நடவடிக்கை பாயும்" என எச்சரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+